MahaKumbh Mela 2025: நெகிழ்ச்சி மிக்க துருக்கி 'பக்தை'யின் மகா கும்பமேளா பயணம்!
டெல்லி: உலகின் மிகப் பெரிய ஆன்மீக ஒன்றுகூடல் பெருவிழாவான மகா கும்பமேளாவில் ஒவ்வொரு நாளும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநில அரசு இதற்கான விரிவான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் மகா கும்பமேளாவில் பங்கேற்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நோக்கி படையெடுத்து வருகின்றனர். அவர்களில் ஒருவரான துருக்கியின் பினாரின் அனுபவம்தான் இது..

மத்திய அரசின் கலாசார அமைச்சகம் வெளியிட்டுள்ள துருக்கியைச் சேர்ந்த பினாரின் மகா கும்பமேளா அனுபவம்:
மஹா கும்பமேளாவுக்கான பினாரின் பயணம் ஒரு கனவுடன் தொடங்கியது. துருக்கி நாட்டின் குடிமகளான அவர், இந்தியாவின் வளமான கலாச்சாரம் பற்றி ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர். மஹா கும்பமேளா குறித்த நம்பிக்கை, பாரம்பரியம், மனிதநேயம் ஆகியவற்றின் சங்கமம் பற்றிய கதைகளை நீண்டகாலமாக அவர் கேட்டிருந்தார். 2025 ஜனவரியில், கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் புனித இடத்தில் நின்றபோது அவரது கனவு நனவாகியது.
பினார், பாரம்பரிய இந்திய உடையை அணிந்து, கங்கையில் புனித நீராடினார். இது சனாதன தர்மத்தில் மிகுந்த முக்கியத்துவத்தைக் கொண்ட பாவம் நீங்கி புண்ணியமடைதல் செயலாகும். நெற்றியில் திலகமிட்ட அவரை, புனித நீர் தழுவிய கணத்தில் தெய்வீகத்தில் தன்னை முழுமையாக அவர் மூழ்கடித்துக் கொண்டார். பினாரைப் பொறுத்தவரை, இது கண்டங்களைக் கடந்த பயணம் மட்டுமல்ல, ஆழமான ஆன்மீக விழிப்புணர்வும் ஆகும்.
புனித நதிகளின் சங்கம மண்ணில் நடை போட்டதும், கங்கையில் புனித நீராடியதும் தம்மால் மறக்க முடியாத அனுபவங்கள் என்று கூறி, சனாதன தர்மத்தின் மீதான தனது புதிய புரிதலையும், மரியாதையையும் வெளிப்படுத்தினார்.
மகா கும்பமேளா 2025 இந்தியாவின் மிகப்பெரிய ஆன்மீகக் கூடுகையாக மட்டுமின்றி, லட்சக்கணக்கானவர்களை ஈர்க்கும் உலகளாவிய கலாச்சார நிகழ்வாகவும் திகழ்கிறது. இந்த உலகளாவிய ஆர்வத்தைப் பூர்த்தி செய்ய, உத்தரபிரதேசத்தின் யோகி அரசு டிஜிட்டல் மாற்றத்தை மேற்கொண்டு மகா கும்பமேளா 2025 ஐ "டிஜிட்டல் மகா கும்பமேளா" என்று குறிப்பிட்டுள்ளது. இந்த முயற்சியின் மையப்பகுதி https://kumbh.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளமாகும். இது மகா கும்பமேளாவின் அனைத்து அம்சங்களையும் குறித்த விரிவான தகவல்களை வழங்குகிறது. பாரம்பரியங்கள் மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் முதல் பயண வழிகாட்டுதல்கள் மற்றும் தங்குமிட விருப்பங்கள் வரை அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்தப் போர்ட்டல் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நாடுகின்ற ஒரே இடமாக விளங்குகிறது. முக்கிய இடங்கள், முக்கிய நீராடல் திருவிழாக்கள், செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை, ஊடக காட்சியகங்கள் ஆகிய அனுபவத்தை இது உறுதி செய்கிறது. ஜனவரி முதல் வாரத்தில் மட்டும், 183 நாடுகளைச் சேர்ந்த 33 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் இந்த இணையதளத்தை அணுகியுள்ளனர்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக!












Click it and Unblock the Notifications