பதவி, வீடு, கர்ப்பப்பை என எல்லாத்தையும் இழந்தேன்! ஆனால் எதை பெற்றேன் தெரியுமா? தெறிக்கவிட்ட மஹுவா
டெல்லி: நான் ஒரு அறுவை சிகிச்சையின் போது எனது கர்ப்பப்பையையும் இழந்துவிட்டேன். ஆனால் நான் எதைப் பெற்றேன் தெரியுமா என திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா பேசிய பேச்சுகள் வைரலாகி வருகின்றன.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி கட்சியினருடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது. இந்த நிலையில் புதிதாக அமைந்த அரசின் முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் கடந்த வாரம் திங்கள்கிழமை தொடங்கியது.

இந்த கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். அவருடைய உரைக்கு நன்றித் தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. அந்த வகையில் கூட்டத் தொடரின் 6ஆவது நாளான நேற்று மக்களவையில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே விவாதம் நடந்தது. இத்தகைய சூழலில்தான் நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ராகுல் காந்தி முதல்முறையாக நேற்று உரையாற்றினார்.
இந்த நிலையில் மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய திரிணமூலம் காங்கிரஸ் கட்சியின் எம்பி மஹுவா மொய்த்ரா, "கடந்த முறை நான் இந்த நாடாளுமன்றத்தில் நின்ற போது எனக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டது.
ஒரு எம்பியின் குரல்வளையை நெரித்ததால் ஆளும் பாஜக அரசு பெரும் விலை கொடுத்துவிட்டது. என்னை ஒடுக்க நீங்கள் நினைத்தீர்கள். ஆனால் மக்கள் உங்களது 63 எம்பிக்களை நிரந்தரமாக வீட்டில் உட்கார வைத்துவிட்டனர். தேர்தல் ஆணையத்தை மீறி எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளோம். ஆளும் கட்சியின் விதிமீறல்களை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவே இல்லை.
நாங்கள் நெருப்பாற்றில் நீந்தி வந்துள்ளோம். இன்னமும் பாஜகவினர் அவர்களது அரசு மைனாரிட்டி என்பதை உணரவே இல்லை. எதிர்க்கட்சிகளை உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது. செங்கோல் என்பது மன்னராட்சியின் அடையாளம். இந்திய வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் செங்கோலுடன் குடியரசுத் தலைவர் அழைத்து வரப்பட்டார். இது ஜனநாயக நாடு. இங்கு செங்கோல் எதற்காக?
மணிப்பூரில் ரத்தக்கறை படிந்துள்ளதை நேரில் சென்று பாருங்கள். ஜனாதிபதி உரையில் ஒரு வார்த்தை கூட மணிப்பூர் குறித்து இல்லையே ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். அது போல் அவர் மேலும் பேசுகையில் நான் என்னுடைய பதவியை இழந்துவிட்டேன், வீட்டை இழந்துவிட்டேன். ஒரு அறுவை சிகிச்சையின்போது எனது கர்ப்பப்பையை இழந்துவிட்டேன்.
நான் எதைப் பெற்றேன் என தெரியுமா? ராகுல் சொன்னது போல பயத்தில் இருந்து விடுதலை பெற்றேன். உங்களை பார்த்து நான் பயப்படமாட்டேன்! உங்கள் ஆட்சியின் முடிவை நாங்கள் பார்ப்போம். உங்கள் அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித் துறை, உங்கள் கேலிகள், உங்கள் ஊடகங்கள் என எதுவும் எங்களை பயமுறுத்தாது. இவ்வாறு மஹுவா ஆவேசமாக பேசினார்.
எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி நேற்று நிறைய கேள்விகளை எழுப்பியிருந்தார்.அவர் ஆற்றிய உரைகளில் சில பகுதிகள் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் பெரும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். இதுகுறித்து ராகுல் செய்தியாளர்களிடம் பேசுகையில் மோடி உலகில்தான் உண்மையை மறைக்க முடியும். உண்மையான உலகில் உண்மையை மறைக்கவே முடியாது. அவை குறிப்பிலிருந்து எதை வேண்டுமானாலும் நீக்கட்டும் என ராகுல் காந்தி பதில் அளித்திருந்தார்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு












Click it and Unblock the Notifications