டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு செலுத்தப்படாத மவுன அஞ்சலி எனக்கும் வேண்டாம்- மைத்ரேயன்

Google Oneindia Tamil News

Recommended Video

    Maithreyan cries in Rajya sabha: ஈழத் தமிழர்களுக்கு செலுத்தப்படாத அஞ்சலி எனக்கும் வேண்டாம்-மைத்ரேயன்

    டெல்லி: ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு செலுத்தப்படாத மவுன அஞ்சலி நான் இறந்த பிறகு எனக்கும் செலுத்த வேண்டாம் என மைத்ரேயன் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டார்.

    தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு மைத்ரேயன், லட்சுமணன், ரத்தினவேல், அர்ஜூனன், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி ராஜா, திமுக சார்பில் கனிமொழி ஆகியோர் அனுப்பப்பட்டனர்.

    இவர்களது பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்தது. இதனிடையே திமுக மாநிலங்களவை எம்பியாக இருந்த கனிமொழி இந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தூத்துக்குடி எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவராகவே மாநிலங்களவை எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

    மைத்ரேயன்

    மைத்ரேயன்

    இந்த நிலையில் மற்ற 5 பேரும் இன்று ஓய்வு பெற்றனர். அப்போது கடைசியாக அவர்கள் 5 பேரும் உரையாற்றினர். இதில் மைத்ரேயன் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.

    விசுவாசமாக

    விசுவாசமாக

    அவர் பேசுகையில் என் மீது அளவுக்கடந்த நம்பிக்கை வைத்து 3 முறை இந்த அவைக்கு அனுப்பி அழகு பார்த்தவர் ஜெயலலிதா. அவருக்கு நான் எப்போதும் விசுவாசமாக இருப்பேன்.

    இதயத்தை கிழித்த சம்பவம்

    இதயத்தை கிழித்த சம்பவம்

    இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது மாநிலங்களவை கண்டுகொள்ளவும் இல்லை. இரங்கல் தெரிவிக்கவும் இல்லை. என் இதயத்தை கிழித்த சம்பவங்களில் இதுவும் ஒன்று.

    வாடிக்கை

    அதனால் என்னுடைய இறப்பின் போதும் இந்த அவை எனக்கு இரங்கல் தெரிவிக்க வேண்டாம் என உருக்கமாக பேசினார். பொதுவாக எம்பிக்களோ, முன்னாள் எம்பிக்களோ உயிரிழந்தால் அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்படுவது வாடிக்கையான ஒன்று. அதைத்தான் மைத்ரேயன் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Maithreyan asks Rajyasabha not to express mourn for my demise as the Parliament failed to express mourn for Tamil Genocide in Lanka.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X