பயங்கரம்.. டெல்லி கோர்ட்டில் துப்பாக்கிசூடு.. ரவுடி உட்பட 4 பேர் பலி.. நடந்தது என்ன.. பரபரப்பு தகவல்

டெல்லியில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி ரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பிரபல தாதா கோகி உள்பட 4 பேர் பலியானார்கள்.. வழக்கு விசாரணைக்காக தாதா கோகி உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தபோது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Recommended Video

    டெல்லியில் கோர்ட் வளாகத்தில் பயங்கரம்… துப்பாக்கிச்சூட்டில் தாதா உட்பட 4 பேர் சுட்டுக்கொலை!

    வடமாநிலங்களில் நாளுக்கு நாள் வன்முறைகள் அதிகரித்து கொண்டே போகின்றன.. குறிப்பாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அச்சமூட்டும் அளவுக்கு அதிகரித்துக்கொண்டே செல்கின்றன...

    பெண்கள் வெறும் உடல் அல்ல என்பது பற்றி குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும் என்றும் கிரிமினல் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் விரைவாக விசாரித்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    மற்றொரு பக்கம் இதே குற்றங்களை வைத்து அரசியலாக்கியும் சிலர் வருகின்றனர்.. அந்தந்த மாநில அரசை கேள்வி கேட்டு, எதிர்க்கட்சிகள் விமர்சித்தாலும், கண்டனம் தெரிவித்தாலும்கூட, இந்த குற்ற சம்பவங்கள் குறையவே இல்லை.. இந்த நிலையில் இன்றும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. தலைநகர் டெல்லியில் கோர்ட்டிலேயே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

     முன்பகை

    முன்பகை

    டெல்லி ரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் இந்த துப்பாக்கி சூடு நடந்துள்ளது.. ரோஹிணி கோர்ட் வளாகத்தில் இன்று வழக்கம் போல் பணிகள் நடந்து கொண்டிருந்தது... திடீரென கோர்ட் அறை எண் 207 அருகே துப்பாக்கிச்சுடும் சப்தம் கேட்டதால் அங்கிருந்தோர் சிதறி ஓடினர்... இதற்கு பிறகு கூடுதல் போலீசார் விரைந்து ஓடினர்.. அப்போதுதான் பிரபல தாதா கோகியை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் அது என்பது தெரியவந்தது.

    கோர்ட்

    கோர்ட்


    இந்த துப்பாக்கி சூட்டில் ரவுடி கோகி உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.. இவர்கள் ஒரு வழக்கு தொடர்பாக விசாரணைக்காக கோர்ட்டுக்கு வந்திருந்தனர்.. நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜராகி இருந்தபோதுதான் திடீரென துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது.. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

     வழக்கறிஞர் உடை

    வழக்கறிஞர் உடை

    ரவுடி கோகியை கொல்வதற்காக, எதிராளிகள் வழக்கறிஞர் போல டிரஸ் அணிந்து கோர்ட்டுக்குள் வந்துள்ளனர்.. கோர்ட் உடையில் அவர்கள் காலையில் இருந்தே நடமாடி உள்ளனர்.. கோகியை விசாரணைக்கு அழைத்து வந்ததுமே, துப்பாக்கியை எடுத்து அவரை சுட்டுவிட்டனர்.. இதனால் கோர்ட்டுக்கு வந்திருந்த பொதுமக்கள் தலைதெறிக்க ஓடினார்கள்..

     துப்பாக்கி சூடு

    துப்பாக்கி சூடு

    இரு தரப்பினர் மோதலால் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. ரவுடி கோகி என்பவர் ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்தவராம்.. ஜிதேந்தர் கோகி என்பது முழு பெயர்.. டெல்லியில் நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+