"ஆபரேஷன் MCMA".. ரகுராம்ராஜன் அடங்கிய 9 பேர் குழு.. காங்கிரசை உயிர்ப்பிக்க பிரஷாந்த் கிஷோர் பிளான்!
டெல்லி: காங்கிரஸ் கட்சியில் பிரஷாந்த் கிஷோர் இணைய போவதாக தகவல்கள் வந்துகொண்டு இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியிடம் முக்கிய செயல் திட்ட அறிக்கையை பிகே சமர்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video
நேற்று முதல்நாள் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, மூத்த தலைவர்கள் ராகுல், பிரியங்கா ஆகியோருடன் பிரஷாந்த் கிஷோர் சந்திப்பு நடத்தினார். நேற்று முதல்நாள் மாலை நடந்த சந்திப்பில் காங்கிரசில் பிரஷாந்த் கிஷோர் இணைவது குறித்து கோரிக்கைகள் வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.
பிரஷாந்த் கிஷோருக்கு உயரிய பொறுப்பு வழங்கப்படும் என்றும், 3 நாட்களுக்குள் அவர் இதற்கு பதில் அளிக்க வேண்டும் என்றும் ராகுல் கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில்தான் ராகுல் காந்தியிடம் பிரஷாந்த் கிஷோர் முக்கிய செயல்திட்டம் ஒன்றை அறிக்கையாக சமர்ப்பணம் செய்ததாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் புதுப்பிப்பு
காங்கிரசை கட்சியை புதுப்பிக்கும் வகையில் பிரஷாந்த் கிஷோர் இந்த திட்டத்தை ராகுல் மற்றும் சோனியா காந்தியிடம் சமர்ப்பித்து இருக்கிறார். Make Congress Move Again என்ற பெயரில் "எம்சிஎம்ஏ ஆபரேஷன்" ஒன்றை பிரஷாந்த் கிஷோர் சமர்ப்பித்து உள்ளார். அதன்படி காங்கிரஸ் கட்சி தனியாக பாராளுமன்ற குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்ற திட்டத்தை பிரஷாந்த் கிஷோர் சமர்ப்பித்துள்ளார்.

பாராளுமன்ற குழு
கட்சியின் பாராளுமன்ற நிலைப்பாடுகளை முடிவெடுக்கும் வகையில் பாராளுமன்ற குழு அமைக்க வேண்டும் என்று பிரஷாந்த் கிஷோர் கூறியுள்ளார். அதோடு முன்னாள் ஆர்பிஐ இயக்குனர் ரகராம் ராஜன், தொழிலதிபர் ராஜீவ் பஜாஜ் ஆகிய 9 பேர் அடங்கிய குழு அமைக்க வேண்டும். காங்கிரசின் நிதி நிலைமையை குறித்து ஆலோசிக்கவும், பெரு நிறுவனங்களின் நிதியை பெறவும், கட்சியின் பொருளாதாரம் தொடர்பான வாக்குறுதிகள், திட்டங்களை முடிவு செய்யவும் இந்த குழுவை அமைக்க வேண்டும் என்று பிரஷாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

தேர்தல்
கட்சிக்குள் புதிய பதவிகள் பொறுப்புகளை ஏற்படுத்த வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்கள், அமெரிக்க கட்சிகளில் இருப்பது போன்ற பொறுப்புகளை உருவாக்க வேண்டும். இதற்காக புதிய தேர்தல்களை நடத்த வேண்டும். ஒவ்வொரு பொறுப்பிற்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் பிகே இந்த செயல்திட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.

இருப்பார்
காங்கிரசில் பிகே இணைவது இன்னும் சந்தேகமான விஷயமாகவே இருக்கும் நிலையில், அவர் ஆலோசனை குழுவில் இடம்பெறுவார் என்பது மட்டும் உறுதியாகி உள்ளது. கட்சியை மீட்டு கொண்டு வர அனைத்து விதமான ஆலோசனைகளையும் வழங்குவேன் என்று பிகே கூறியதாக தெரிகிறது. அதோடு ஜி 23 லீடர் எனப்படும் குலாம் நபி ஆசாத், கபில் சிபல் உள்ளிட்ட 23 காஞ்சி தலைவர்களுடன் சோனியா, ராகுல் காந்தி மீண்டும் இணக்கமாக செல்வது, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்தும் பிகே இந்த செயல்திட்டத்தில் பேசி இருக்கிறார்.

காங்கிரஸ்
காங்கிரஸை மீட்டு எடுப்பதிலும், கட்சியை புதிய திசைக்கு கொண்டு செல்வதிலும் பிகே மிகப்பெரிய ரோல் ஒன்றை பெறுவார். அவருக்கு அளவு கடந்த அதிகாரம் கொண்ட பொறுப்பு ஒன்று வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இது கட்சி சார்ந்த பொறுப்பா, ஆலோசகர் என்ற வகையிலான பொறுப்பா என்பது விரைவில் தெரியவரும். கட்சியை புதுப்பிக்கும் வகையில் ஏற்கனவே ஐபேக் நிறுவனம் சர்வே எடுக்க தொடங்கிவிட்டதாகவும் தெரிகிறது.

புதுப்பிக்க முடிவு
காங்கிரஸ் கட்சிக்குள் தேர்தல் நடத்தும் வகையிலும், வலுவான தலைவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையிலும் ஐபேக் ஏற்கனவே சர்வே பணிகளை தொடங்கிவிட்டதாக தெரிகிறது. முதல் கட்டமாக கட்சி தேர்தல் நடத்துவது, பாராளுமன்ற குழு, ஆலோசனை குழு அமைப்பது குறித்து பிகே ராகுல், சோனியா காந்தியிடம் பேசி இருக்கிறார். இது தொடர்பான முக்கிய முடிவுகள் வரும் நாட்களில் எடுக்கப்படும் என்கிறார்கள்.

சந்தோசம்
காங்கிரஸ் கட்சி இப்படி மாற்றத்தை விரும்புவது கட்சியினர் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளதாம். ஆனால் பிகே போன்ற வெளி நபர்கள் கட்சியில் பெரிய அதிகாரம் பெறுவதை கட்சியின் மூத்த தலைவர் சிலர் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. கட்சியை புதுப்பிப்பது சரி, ஆனால் இதற்காக வெளிநபர்களுக்கு அதிகபட்ச அதிகாரம் கொடுக்க கூடாது என்றும் குரல்கள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications