13 + 1.. பாஜகவுக்கு எதிராக மெகா வியூகம்.. முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த முக்கிய தலைவர்
டெல்லி: பாஜக அரசுக்கு எதிராக வியூகங்களை வகுக்க காங்கிரஸ் விரைவில் ஒரு கூட்டத்தை நடத்த இருக்கிறது. இதில் பங்கேற்க ஒத்த கருத்து கொண்ட தோழமை கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே தொலைப்பேசியில் அழைத்து அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. கடந்த 2 தேர்தலிலும் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. எனவே 2024ம் ஆண்டு தேர்தலில் கட்சி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்கிற நெருக்கடியில் இருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு நடந்த சம்பவங்கள் காங்கிரஸின் வெற்றி வாய்ப்பின் சதவிகிதத்தை வெகுவாக பாதித்தது. அதாவது மூத்த தலைவர்கள் கட்சியிலிருந்து வெளியேறியது, கட்சிக்கு புதிய தலைவர் கோரி கடிதம், பாஜகவுக்கு தாவிய எம்எல்ஏக்கள் போதாத குறைக்கு பஞ்சாப் போன்ற மாநிலங்களில் ஆட்சியை இழந்தது என காங்கிரசுக்கு பலத்த அடி விழுந்தது.

இதிலிருந்து எழவில்லை எனில் கட்சி ஒரேயடியாக முடிவுக்கு வந்துவிடும் என சீனியர்கள் எச்சரிக்க, அவர்கள் காட்டிய பாதையில் கட்சியை நிர்வாகிகள் கொண்டு சென்றனர். கட்சி தலைவருக்கான தேர்தல் தொடங்கி பாரத் ஜடோ யாத்திரை வரை காங்கிரஸின் செயல்பாடுகளுக்கு மக்கள் செல்வாக்கு கூட தொடங்கியது. வெற்றி வாய்ப்புக்கான சதவிகிதம் மெள்ள உயர்ந்தது. குறிப்பாக பாரத் ஜடோ யாத்திரை அனைவர் மத்தியிலும் பரவலாக பேசப்பட்டது.
ராகுல் மீதான வழக்கு: சரி இப்போது களம் தயாராகிவிட்டது, இனி களத்தில் இறங்கி விளையாட ஆட்களைதான் தேர்வு செய்ய வேண்டும். இந்த சாணக்கிய பணியில் கட்சி மும்முரமாக ஈடுபட்டு வந்த நிலையில்தான் ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு சூடுபிடித்தது. கடந்த 2019ம் ஆண்டு கர்நாடகாவில் அவர் ஆற்றிய உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் தீர்ப்பு மார்ச் 23ம் தேதி வெளியான் நிலையில், ராகுல் காந்தி குற்றவாளி எனவும் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாகவும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.
கூட்டுக்குழு விசாரணை: இதற்கு அடுத்த நாளே அவரை எம்பி பதவியிலிருந்து மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தின் அடிப்படையில் தகுதி நீக்கம் செய்தவாக மக்களவை செயலகம் அறிவித்தது. இது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் அதிருப்பதியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிராக தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வருகிறது. அதேபோல ஹிண்டன்பர்க் விவகாரத்தில் அதானி குழுமம் மீது நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையையும் கோரியுள்ளது. இதற்கு பதிலடியாக ராகுல் காந்தி வெளிநாட்டில் பேசிய விஷயத்தை குறிப்பிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக வலிறுத்தி வந்தது. இப்படியாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பாதி முழுமையாக பாதிக்கப்பட்டது.
விசாரணை அமைப்புகள்: இந்நிலையில்தான் 14 எதிர்க்கட்சிகள் சேர்ந்து உச்சநீதிமன்றத்தை சமீபத்தில் நாடியிருந்தன. அதாவது கடந்த 2014ம் ஆண்டுக்கு பின்னர் மோடி பிரதமராக பதவியேற்ற பின்னர் சிபிஐ, அமலாக்கப் பிரிவு உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் மூலம் வழக்குப் பதிவு செய்யப்படுவது 6 மடங்கு அதிகரித்திருக்கிறது என்றும், இந்த விசாரணை அமைப்புகள் பதிவு செய்த வழக்குளில் 95% சதவிகிதமானோர் எதிர்க்கட்சியினர், இதில் தண்டனை பெற்றவர்கள் வெறும் 23 சதவிகிதம்தான் என்று நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தனர். சோனியா, ராகுல் மீது நேஷனல் ஹெரலாட்டு வழக்கு, ஆம் ஆத்மியின் மனிஷ் சிசோடியா மீது மதுபான கொள்கை ஊழல் வழக்கு, தெலங்கான முதலமைச்சரின் மகள் கவிதா மீதும் இதே வழக்கு, பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் மற்றும் அவரது தந்தை லாலு பிரசாத் மனைவி ராப்ரி தேவி மகள் மிசா பாரதி ஆகியோர் மீது ஊழல் வழக்கு, மமதாவின் அரசியல் வாரிசும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளருமான அபிஷேக் பானர்ஜி மீது நிலக்கரி ஊழல் வழக்கு என மத்திய அரசின் விசாரணை அமைப்புக்கள் எதிர்க்கட்சிகளின் மீது பிடியை இறுக்கியது.
14 எதிர்க்கட்சிகள்: ஆனால் அதே நேரத்தில் இந்த கட்சிகளிலிருந்து பாஜகவில் இணைந்த அரசியில் புள்ளிகள் மீதுள்ள வழக்குகள் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இப்படியாக 14 கட்சிகள் நீதிமன்றத்தை நாடின. ஆனால் நீதிமன்றம் இந்த மனுவை நிராகரித்துவிட்டது. இந்த பின்னணியில்தான் ஒத்த கருத்துள்ள தோழமை கட்சிகளுடன் கலந்துரையாட காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே முன்வந்திருக்கிறார். ஏனெனில் ஆளும் கட்சியை எதிர்த்து நீதிமன்றம் சென்ற 14 எதிர்க்கட்சிகள் 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றிணைய வேண்டும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதில் திமுகவும் ஒன்றாக இருக்கும் (13+1)
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு: இந்த ஒருங்கிணைப்பின் முயற்சியாக திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் இடதுசாரி கட்சி தலைவர்களை காங்கிரஸ் ஒருங்கிணைந்த கூட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் கார்கே தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளார். இன்னும் சில கட்சியின் தலைவர்களுடன் பேச இருப்பதால் இந்த கூட்டம் எப்போது நடக்கும்? எங்கு நடக்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. தமிழ்நாட்டில் திமுகவும்-காங்கிரஸும் தொடர்ந்து கூட்டணியிலிருந்து வருகின்றன. கடந்த ஆண்டு தொடங்கிய பாரத் ஜடோ யாத்திரையை கன்னியாகுமரியிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் தொடங்கி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்?












Click it and Unblock the Notifications