டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காங். கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்றார் மல்லிகார்ஜுன கார்கே! இமாச்சல் தேர்தலில் சாதிப்பாரா?

Google Oneindia Tamil News

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே இன்று பதவியேற்றார். இனி வரும் சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கொடி பறக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றார். கார்கேவின் பதவியேற்பு விழா டெல்லி காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இடைக்காலத் தலைவராக உள்ள சோனியா காந்தி, கார்கேவிடம் தலைவருக்கான பொறுப்பை ஒப்படைத்தார். இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர தலைவர் கிடைத்துவிட்டார்.

சசி தரூர் vs மல்லிகார்ஜுன கார்கே.. புதிய காங்கிரஸ் தலைவர் யார்? 65 இடங்களில் தொடங்கிய வாக்குப்பதிவு! சசி தரூர் vs மல்லிகார்ஜுன கார்கே.. புதிய காங்கிரஸ் தலைவர் யார்? 65 இடங்களில் தொடங்கிய வாக்குப்பதிவு!

தலைவர் தேர்தல்

தலைவர் தேர்தல்

அதற்கு முன்பு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை கார்கேவிடம் காங்கிரஸ் தேர்தல் ஆணையராக பணியாற்றிய மதுசூதனன் மிஸ்திரி வழங்கவுள்ளார். 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு, குடும்பத்தை சாராத ஒருவர் மீண்டும் காங்கிரஸ் தலைவராகிறார். டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

நவம்பர் 12

நவம்பர் 12

அடுத்த மாதம் நவம்பர் 12 ஆம் தேதி இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. அது போல் விரைவில் குஜராத் சட்டசபைக்கும் தேர்தல் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் மல்லிகார்ஜுன கார்கே பாஜகவை சமாளித்து தனது கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்று புத்துயிர் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

காங்கிரஸ் கட்சி

காங்கிரஸ் கட்சி

பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சிக்கு நேரு குடும்பத்தினரே தலைவர்களாக இருந்து வந்தனர். அந்த வரிசையில் ராகுல் காந்தி தலைமை பதவி வகித்து வந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார்.

இடைக்கால தலைவர்

இடைக்கால தலைவர்

இதையடுத்து இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார். முழுநேர தலைவரை தேர்வு செய்தால் கட்சி பலப்படும் என கருத்தும் வலுப்பெற்றது. மேலும் நேரு குடும்பத்தை சாராதவர்கள் தலைவராக வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. இந்த நிலையில் கார்கேவும் சசி தரூரும் போட்டியிட்டனர்.

68 இடங்கள்

68 இடங்கள்

நாடு முழுவதும் 68 இடங்களில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு 9,915 மாநில காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஓட்டு போட்டனர். இந்த வாக்குகள் கடந்த 19ஆம் தேதி எண்ணப்பட்டன. இதில் 7,897 வாக்குகள் பெற்று மல்லிகார்ஜுன கார்கே வென்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூர் 1000 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

English summary
Mallikarjuna Kharge to take oath as AICC President today. Sonia Gandhi will present and handover responsibilities to Kharge
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X