திடீர்னு தீக்குளித்த 2 பேர்.. அதுவும் சுப்ரீம் கோர்ட் வாசலிலேயே.. என்ன காரணம்?.. டெல்லியில் பரபரப்பு

சுப்ரீம் கோர்ட் வாசலிலேயே தீக்குளிக்க 2 பேர் முயன்றுள்ளனர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாட்டின் தலைநகர் டெல்லியில், சுப்ரீம் கோர்ட் வாசலிலேயே 2 பேர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

டெல்லியில் சுப்ரீம் கோர்ட் அமைந்துள்ள பகுதி எப்போதும் பரபரப்பாகவும், பாதுகாப்பு நிறைந்த பகுதியாகவும் காணப்படும்...

மிக முக்கிய வழக்குகள், மேல்முறையீடுகள், சம்பந்தமான விசாரணைகள் இங்கு தினந்தோறும் நடப்பதால், ஏராளமான மக்கள் நடமாட்டம் காணப்படும்.. அதனால் எந்நேரமும் போலீஸ் செக்யூரிட்டிகளும் அங்கு அதிகமாக இருப்பார்கள்.

 பாதுகாப்பு

பாதுகாப்பு

சுற்றிலும் சிசிடிவி கேமராவும் பொருத்தப்பட்டிருக்கும்.. அப்படிப்பட்ட பாதுகாப்பு நிறைந்த சுப்ரீம்கோர்ட்டில் "டி" எண் கொண்ட நுழைவாயில் பகுதியில் இன்று மதியம் 12 மணிக்கு, திடீரென ஒரு பெண்ணும், ஒரு ஆணும் கையில் வைத்திருந்த பெட்ரோலை தங்கள் உடம்பில் கடகடவென ஊற்றி கொண்டு, தீ வைத்தும் கொளுத்தி கொண்டனர்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

உடம்பெல்லாம் நெருப்பு பற்றிக் கொண்டு எரிந்த நிலையில், அவர்கள் அலறி துடித்தனர்.. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு போலீசார், ஓடிச்சென்று தண்ணீரை ஊற்றி, தீயை அணைத்து 2 பேரையுமே மீட்டனர்.. ஆனால், அதற்குள் அவர்களுக்கு உடம்பில் காயம் ஏற்பட்டது.. இதையடுத்து இருவரையும் ராம் மனோகர் லோஹியா ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.. அங்கு தீயில் எரிந்து போன 2 பேருக்குமே தீவிர சிகிச்சை நடந்து வருகிறது.

தற்கொலை

தற்கொலை

இந்தியாவில் கடன், குடும்ப பிரச்சனை, மன அழுத்தம் போன்ற காரணங்களுக்காக ஒருநாளைக்கு சராசரியாக 312 பேர் தற்கொலை செய்வதாக ஏற்கனவே தேசிய குற்ற ஆவணகாப்பகம் அறிக்கை ஒன்றை தெரிவித்திருந்தது.. அதிலும் டெல்லியில்தான் அதிக தற்கொலைகள் நடப்பதாக கூறியிருந்தது.. அப்படி இருக்கும்போது, இன்றும்கூட ஒரு தற்கொலை முயற்சி நடந்துள்ளது அதிர்ச்சியை தந்துவருகிறது..

பாதுகாப்பு

பாதுகாப்பு

அதிலும், அத்தனை போலீஸ் பாதுகாப்புகளையும் மீறி , சுப்ரீம் கோர்ட் வாசலிலேயே நடந்த இந்த சம்பவம் கூடுதல் ஷாக்கை ஏற்படுத்தி வருகிறது. அதேசமயம், தற்கொலைக்கு முயன்றவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை.. ஒருவேளை வழக்கு சம்பந்தமாக ஏதாவது பாதகமான தீர்ப்பு வந்ததா? அல்லது வேறு ஏதேனும் விவகாரமா என்று உறுதியாக தெரியவில்லை.. ஆனால், கோர்ட் வாசலில் வந்து இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதால், வழக்கின் பாதிப்புதான் காரணம் என்று ஓரளவு யூகிக்கப்படுகிறது.. விசாரணை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+