"லிவ்விங்-இன்" காதலி கர்ப்பம்! கவனித்துக்கொள்ளனுமாம்! கைதி காதலனுக்கு ஜாமீன் கொடுத்த டெல்லி ஹைகோர்ட்
டெல்லி: டெல்லியில் விசாரணை அமைப்புகளின் அடையாள அட்டை, ஸ்டிக்கர்களை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு கைதான இளைஞருக்கு அவரது நிறைமாத கர்ப்பிணியை கவனித்து கொள்ள இடைக்கால ஜாமின் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லியில் உளவுத்துறை மற்றும் புலன் விசாரணை அமைப்புகளின் அடையாள அட்டைகள் மற்றும் ஸ்டிக்கர்களை வாகனத்தில் ஒட்டி மோசடி நடந்தது.
இதுதொடர்பாக ‛லிவ் இன் ரிலேசன்ஷிப்'உறவில் உள்ள ஜோடியை கடந்த ஜனவரி மாதம் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கர்ப்பிணியான இளம்பெண்
இந்நிலையில் இளம்பெண் கர்ப்பிணியாக இருந்தார். இதனால் அவருக்கு சிறையில் இருப்பது சிரமத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட காரணங்களை கோரி நீதிமன்றத்தில் ஜாமின் கோரினார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இளம்பெண்ணுக்கு கடந்த மாதம் ஜாமின் வழங்கியது.

ஜாமின் கோரிய ‛பார்ட்னர்’
இந்நிலையில் தனக்கும் ஜாமின் வழங்க வேண்டும் என அந்த இளைஞர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், ‛‛எனது ‛லிவ் இன் ரிலேஷன்ஷிப்' காதலி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். எங்களுக்கு எங்களின் இருவீட்டாரின் ஆதரவு இல்லை. இதனால் அவள் 90 வயது நிரம்பிய பாட்டி தாத்தாவுடன் வசிக்கிறார். நிறைமாத கர்ப்பிணியாக உள்ள அவரை தாத்தா-பாட்டியால் கவனிக்க முடியாது. இதனால் கர்ப்பிணி பாட்னரை கவனிக்க 8 வாரம் ஜாமின் வழங்க வேண்டும்'' என கூறியிருந்தார்.

3 வாரம் ஜாமின் வழங்கல்
இந்த மனு மீது நேற்று நீதிமன்றம் விசாரித்தது. நீதிபதி பூனம் பம்பா விசாரணை நடத்தினார். அப்போது, ‛‛தாத்தா, பாட்டியின் முதுமை மற்றும் கர்ப்பிணிக்கு வேறு துணை இல்லாததை நீதிமன்றம் கவனத்தில் எடுத்து கொண்டு 3 வார காலம் இடைக்கால ஜாமின் வழங்குகிறது. கர்ப்பிணி ஒருவர் மனநிறைவோடும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.'' என்றார்.

நிபந்தனைகள் என்ன?
மேலும், ‛‛ரூ30 ஆயிரம் பிணைத்தொகையை செலுத்த வேண்டும். விசாரணைக்கு அழைத்தால் உரிய முறையில் ஆஜராக வேண்டும். செல்போன் எண்ணை விசாரணை அமைப்பிடம் வழங்குவததோடு செல்போனை எப்போதும் சுவிட்ச் ஆப் செய்யக்கூடாது. லைவ் லோகேஷன் ஆன் செய்து அனைத்து இடங்களுக்கும் செல்போனை கொண்டு செல்ல வேண்டும். '' என்ற நிபந்தனைகளையும் விதித்தார்.












Click it and Unblock the Notifications