Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏன்டா.. குரைத்தது ஒரு குத்தமாடா! நாயையும் அதன் உரிமையாளரையும்.. மண்டையை பிளந்த இளைஞர்! வெறிச்செயல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைநகர் டெல்லியில் நாய் குரைத்துக் கொண்டே இருந்ததால் ஆத்திரப்பட்டு அண்டை வீட்டார் செய்த பகீர் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    குரைத்தது ஒரு குத்தமாடா! நாயையும் அதன் உரிமையாளரையும்.. மண்டையை பிளந்த இளைஞர்

    நாய்களை உற்ற நண்பன் என்று பொதுவாகக் கூறுவார்கள். அது உண்மையும் கூட! பல நேரங்களில் சக மனிதர்கள் செய்ய முடியாதவற்றையும் கூட நமக்கு நாய்கள் செய்துவிடும்.

    அப்படிப்பட்ட நாய்களைப் பலரும் தங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவே நடத்துவார்கள். குழந்தைகளுக்கு ஈடாக நாய்களைப் பார்த்துக் கொள்வார்கள்.

    நாய்

    நாய்

    அதேநேரம் அனைவருமே நமது செல்ல நாய்களைக் குழந்தைகளாகப் பார்ப்பார்கள் எனச் சொல்ல முடியாது. பக்கத்து வீட்டு நபர் தொடங்கி டெலிவரி பாய் வரை அனைவரை நோக்கியும் நாய் குரைத்துக் கொண்டே இருந்தால், கண்டிப்பாக அவர்களும் டென்ஷன் ஆகவே செய்வார்கள். டெல்லியில் அப்படி டென்ஷன் ஆன நபர் செய்த பகீர் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி வருகிறது.

     டெல்லி

    டெல்லி

    டெல்லியில் உள்ள பஸ்சிம் விஹார் பகுதியில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் வசிக்கும் குடும்பத்தினர் வசிக்கும் நாய், அண்டை வீட்டில் இருக்கும் நபரைப் பார்த்துக் குரைத்துள்ளது. தொடர்ந்து இப்படிக் குரைத்துக் கொண்டே இருந்ததால், கடுப்பான அந்த நபர் இரும்பு கம்பி ஒன்றை எடுத்துக் கொண்டு நாயை அடிக்க துரத்தி உள்ளார். அவரிடம் இருந்த தப்பிய நாய் வீட்டிற்கே திரும்பியது.

     இரும்பி கம்பி

    இரும்பி கம்பி

    அப்போது வீட்டின் முன்புறம் நாயின் உரிமையாளர்களான முதிய தம்பதி நின்று கொண்டு இருந்தனர். தங்கள் வீட்டின் நாயை அடிக்க வருவதைப் பார்த்து, அந்த முதியவர் தடுக்க முயன்றுள்ளார். அந்த நபர் முதியவரை இரும்பி கம்பியை கொண்டு தலையில் தாக்கி உள்ளார். இதைத் தடுக்க வந்த அந்த நாயையும், முதியவரின் மனைவியையும் அடுத்தடுத்து தாக்கினார். அதற்குள் அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் இருவர், அந்த நபரைக் கஷ்டப்பட்டுப் பிடித்துவிட்டனர். அப்போது அவர்களில் ஒருவரும் தாக்கப்பட்டார்.

     வீடியோ

    வீடியோ

    இதையடுத்து சற்று நேரம் கழித்து முதியவர் தட்டுத்தடுமாறி எழுந்து நிற்கிறார். இருப்பினும், தலையில் அடிப்பட்ட நாய் பல நிமிடங்கள் அப்படியே படுத்துக் கொண்டே இருந்தது. பல நிமிடங்களுக்குப் பின்னரே, அந்த நாய் எழுந்து ஓடியது. இந்தச் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து காயமடைந்தவர்கள் அருகே உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

     புகார்

    புகார்

    இந்தச் சம்பவம் தொடர்பாக பஸ்சிம் விஹார் கிழக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் கூறுகையில், "இந்தச் சம்பவம் தொடர்பாக நாயின் உரிமையாளர் புகார் அளித்துள்ளார். அதன்படி IPC மற்றும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணையைத் தொடங்குகிறோம்" என்றார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+