ஜெய்ஸ்ரீராம், இந்தியாவை இந்துக்களே ஆள வேண்டும்.. ஷாகீன்பாக் துப்பாக்கிச் சூடு குற்றவாளி முழக்கம்
Recommended Video
டெல்லி: டெல்லி ஷாகீன் பாகில் துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞர் இந்துக்கள் மட்டுமே இந்தியாவை ஆள வேண்டும் என முழக்கமிட்டுவிட்டதாக விசாரணையில் தெரியவந்தது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஷாகீன் பாக் என்ற பகுதி போராட்டத்தின் முக்கியமாக செயல்படுகிறது. இங்கு பெண்கள், குழந்தைகள் போராடி வருகின்றனர்.
இங்கு நேற்றைய தினம் நுழைந்த இளைஞர் ஒருவர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் இரு முறை சுட்டார். இதனால் அங்கிருந்த போராட்டக்காரர்கள் அச்சமடைந்தனர்.

இந்தியர்கள்
பின்னர் போலீஸார் அவரை மடக்கி பிடித்தனர், அப்போது விசாரணையில் அவரது பெயர் கபில் குஜ்ஜர் என்றும் உத்தரப்பிரதேச மாநிலம் தல்லுபுரா கிராமத்தைச் தேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. அந்த நபர் துப்பாக்கியால் சுடுவதற்கு முன்னர் ஜெய் ஸ்ரீராம் என முழங்கியுள்ளார். மேலும் இந்தியாவை இந்தியர்களே ஆள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

வானத்தை நோக்கி
இதுகுறித்து போலீஸார் கூறுகையில் அந்த நபருக்கு 20 வயது இருக்கும். அவர் வானத்தை நோக்கி இரு முறை துப்பாக்கியால் சுட்டார். காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். நல்ல வேளை போராட்டக்காரர்களிடையே அந்த நபர் செல்லவில்லை. மாறாக போலீஸ் பேரிகாடு அருகேயே வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

2ஆவது முறை துப்பாக்கிச் சூடு
இதனால் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என்றார். துப்பாக்கிச் சூடு நடத்தியவுடன் பெண்கள் அச்சமடைந்தனரே தவிர அந்த இடத்தை விட்டு நகரவே இல்லை. அந்த சமயத்தில் தேசிய கீதத்தை சிலர் பாடினர். சிலர் குரான் படித்தனர். மேலும் சிலர் போலீஸாருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். கடந்த 3 நாட்களில் நடத்தப்பட்ட 2ஆவது துப்பாக்கிச் சூடு இதுவாகும்.

உ.பி. மாநிலம்
நேற்று முன் தினம் டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் பேரணி நடத்தினர். அப்போது அங்கு வந்த 17 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டார். இதில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. அந்த நபர் வைத்திருந்த பையில் அயோத்தியில் இந்து கோயிலை கட்ட வேண்டும் என ஒரு பேப்பரில் எழுதியிருந்தது. அவரும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications