பலருடன் தொடர்பு கள்ளக்காதலி மீது சந்தேகம்... கழுத்தறுத்து கொலை செய்த ரகசிய காதலன்
டெல்லியில் திருமணமான இளம் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறான் அந்த பெண்ணின் ரகசிய காதலன். மூன்று ஆண்டுகள் ரகசியமாக காதலித்த அந்த நபர், வேறு நபருடன் அந்த பெண் தொடர்பில் இருப்பாரோ என்ற சந்தேக
டெல்லி: கள்ளக்காதலிக்கு வேறு யார் மீதாவது காதல் இருக்கலாம் ரகசிய தொடர்பு இருக்கலாம் என்று நினைத்த காதலன் அவரது கழுத்தை அறுத்து கொன்றிருக்கிறான். தனியாக அழைத்துப்போய் கழுத்தை அறுத்து கொன்று கால்வாயில் வீசியிருக்கிறான். நாட்டின் தலைநகர் டெல்லியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
ரகசிய காதலியை கொலை செய்த நபரின் பெயர் அனில் என்பதாகும். அவருக்கு தன்னை விட மூன்று வயது அதிகமான பெண்ணுடன் ரகசிய காதல் இருந்தது. அனிலும் திருமணமானவர்தான். மூன்றாண்டு காலம் ரகசிய தொடர்பு நீடித்தது. என்னதான் காதலியுடன் ஆசை ஆசையாக உறவில் இருந்தாலும் ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. வேறு நபர்களுடன் தொடர்பில் இருக்கலாமோ என்ற சந்தேகத்தில் காதலியை மோட்டார் சைக்கிளில் தனியாக அழைத்துச்சென்று கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

சமாய்பூர் பட்லியில் உள்ள டெல்லி ஜல் போர்டு அலுவலகம் அருகே முனாக் கால்வாயில் கழுத்து அறுபட்ட நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தியாளர்களிடம் பேசிய துணை போலீஸ் கமிஷனர் ஆரவ் சர்மா தெரிவித்தார். யார் இந்த பெண் எதற்காக இப்படி கொலை செய்யப்பட்டார் என்று போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஷாலிமர் கிராமத்தில் வசிக்கும் அந்த பெண் அசோக் விஹாரில் ஒரு ஸ்பாவில் பணிபுரிந்து வந்தார். அந்த பெண்ணுக்கும் திருமணமான அனில் என்பவருக்கும் மூன்று ஆண்டுகளாக தொடர்பு இருந்து வந்தது தெரியவந்தது. இருப்பினும் அந்த பெண் தன்னை தவிர வேறு சில நபர்களுடனும் தொடர்பில் இருப்பது அனிலுக்கு தெரிய வந்தது. தனக்கு துரோகம் செய்ததை தாங்க முடியாத அனில் தனது ரகசிய காதலியை தனது மோட்டார் சைக்கிளில் முனக் கால்வாய் என்ற இடத்திற்கு தனியாக அழைத்து சென்று கழுத்தை அறுத்து கொன்றதை போலீசார் கண்டுபிடித்தனர்.
அனிலை விசாரித்த போது இந்த கொலையை தான் தான் செய்ததாக ஒப்புக் கொண்டார். மேலும் தனது மோட்டார் சைக்கிளில் ரோகினி செக்டார்க்கு அருகிலுள்ள முனாக் கால்வாய்க்கு அழைத்து சென்று தன் காதலியின் கழுத்தை அறுத்துக் கொன்று உடலை கால்வாயில் தூக்கி போட்டதாகவும் தெரிவித்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார் அனிலை கைது செய்து மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு அனிலின் மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டதாக டி.ஜி.பி கூறினார்.
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications