டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிபிஇ கிட் அணிந்து.. 25 கிலோ தங்கத்தை திருடிய எலக்ட்ரீஷியன்.. டெல்லியில் ஷாக்!

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் ஒரு நகைக் கடையில் 25 கிலோ தங்கத்தை திருட மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு உபகரணமான பிபிஇ கிட் அணிந்த நபர் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

டெல்லியில் கால்காஜி பகுதியில் ஒரு நகைக் கடை உள்ளது. இந்த நகைக் கடையில் 13 கோடி மதிப்பிலான 25 கிலோ தங்கம் செவ்வாய்க்கிழமை திருடப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.

Man wears PPE kit to steal 25 kg gold from a jewel shop

அப்போது யாரோ ஒருவர் தன்னை அடையாளம் தெரியாமல் இருக்க கொரோனா வார்டுகளில் மருத்துவர்களும் மருத்துவ பணியாளர்களும் அணிந்து கொள்ளும் பிபிஇ கிட்டை அணிந்திருந்தார்.

பின்னர் விசாரணையில் அவரது பெயர் ஷேக் நூர் என்பது தெரியவந்தது. அவர் ஒரு எலக்ட்ரீஷியன் என்பது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் அவர் பிபிஇ கிட் அணிந்து கொண்டு கயிறு மூலம் 3 அடுக்குமாடி கொண்ட கடையில் ஏறியதும் தெரியவந்தது.

மேலும் கேஸ் கட்டர் மெஷினையும் அவர் பயன்படுத்தியிருந்தார். அவர் செவ்வாய்க்கிழமை இரவ 9.40 மணிக்கு கடைக்குள் வந்தவர் புதன்கிழமை அதிகாலை 3.50 மணிக்கு வெளியே வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஷேக்கிடம் இருந்து 25 கிலோ தங்கத்தை போலீஸார் கைப்பற்றினர்.

English summary
Man wears PPE kit which is to be used by Health officials to prevent from corona to steal 25 kg of Gold.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X