அமலாக்கத்துறை பொய் சொல்கிறது.. மணீஷ் சிசோடியா சொத்துக்கள் முடக்கம் விவகாரத்தில் கெஜ்ரிவால் டென்ஷன்
டெல்லி: டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ரூ.52 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியதாக அமலாகக்த்துறை தெரிவித்தது. இந்த நிலையில் அமலாக்கத்துறை தவறான தகவலை பரப்புவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சாடியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. இந்தக் கொள்கையில் இடம் பெற்றிருந்த வரிக்குறைப்பு உள்ளிட்ட முக்கிய சலுகைகள் குறித்த விவரங்கள் முன்கூட்டியே கசிய விடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தன. இதன் மூலம் மதுபான ஆலை அதிபர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதற்கு ஆதாயமாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து அப்போது டெல்லி முன்னாள் துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவின் வீடு உள்பட 31 இடங்களில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சிபிஐ அதிரடி சோதனை மேற்கொண்டது.
அதன் தொடர்ச்சியாக சிசோடியா உட்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி தேதி மணீஷ் சிசோடியாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அத்துடன் டெல்லி தலைமை செயலகத்தில் மணீஷ் சிசோடியா அலுவலகத்திலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்தனர். இதை ஆம் ஆத்மி கடுமையாக விமர்சித்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் மணீஷ் சிசோடியா அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் 52 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியதாக அமலாகக்த்துறை தெரிவித்தது.
அவரது சொத்து மட்டுமின்றி அமந்தீப் சிங் தால், ராஜேஷ் ஜோஷி, கௌதம் மல்ஹோத்ரா ஆகியோரின் சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், அமலாகக்த்துறை கூறியது பொய் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சாடியுள்ளார். இது தொடர்பாக கெஜ்ரிவால் தனது ட்வீட் பதிவில், மணீஷ் சிசோடியா சொத்துக்கள் முடக்கப்பட்ட விவகாரத்தில் அமலாக்கத்துறை பொய் சொல்கிறது.
மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான 80 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள்தான் முடக்கப்பட்டுள்ளது. முடக்கப்பட்ட சொத்துக்கள் மதுபான கொள்கை அமல்படுத்துவதற்கு முன்பே வாங்கியது" என்று தெரிவித்துள்ளார். மணீஷ் சிசோடியாவிற்கு எதிராக ஆதரங்கள் கிடைக்காததால் அமலாக்கத்துறை அவதூறு பரப்புகிறது
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications