குலாம் நபி ஆசாத்தை தொடர்ந்து மணிஷ் திவாரி? காங். தலைவர் தேர்தல் நடைமுறை குறித்து சரமாரி விமர்சனம்
டெல்லி: காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான நடைமுறைகளை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மணிஷ் திவாரி வலியுறுத்தி உள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் வெளியேறிவிட்டார். ஜம்மு காஷ்மீர் அரசியலை மையமாக வைத்து தனிக் கட்சி தொடங்குவதில் முனைப்பாக இருக்கிறார் குலாம் நபி ஆசாத். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் காங்கிரஸ் நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அசோக் கெலாட்
இந்த நிலையில் அக்டோபர் 17-ந் தேதி நடைபெற உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை முன்வைத்து அக்கட்சியில் குழப்பம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட சோனியா காந்தி குடும்பம் மறுத்துவிட்டது. அத்துடன் தங்களது சாய்ஸாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை முன்னிறுத்துகிறது சோனியா காந்தி குடும்பம்.

சசி தரூர் போட்டி?
அசோக் கெலாட்டுக்கு எதிராக அதிருப்தியாளர்களின் வேட்பாளராக சசி தரூர் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சசி தரூர் பூடகமாகவே பதிலளித்தும் வருகிறார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்த்ரி, தலைவர் தேர்தல் நடைமுறைகள் குறித்து தெரிவித்த கருத்துகள் சர்ச்சையாகி உள்ளது.

மணிஷ் திவாரி சாடல்
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மணிஷ் திவாரி, தலைவர் தேர்தலில் யார் யார் வாக்களிப்பார்கள் என்ற விவரங்கள் பகிரங்கப்படுத்தமாட்டாது என்கிறார் மதுசூதன் மிஸ்த்ரி. இந்த விவரங்களை மாநில காங்கிரஸ் கமிட்டிகளிடம் வாங்கி கொள்ளலாம் என்கிறார். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறவர் ஒவ்வொரு மாநில காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்துக்கும் சென்று இந்த விவரங்களை வாங்கவா முடியும்? ஏன் இந்த விவரங்களை காங். அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடக் கூடாது என கேள்வி எழுப்பியுள்ளார்.

மணிஷ் திவாரி வெளியேறுகிறார்?
குலாம்நபி ஆசாத் தலைமையிலான காங்கிரஸின் அதிருப்தி கோஷ்டியில் இருந்தவர் மணிஷ் திவாரி. கடந்த சில மாதங்களாகவே காங்கிரஸ் மேலிடத்துக்கு எதிராக கருத்துகளை கூறி வருகிறார். இதனால் காங்கிரஸில் இருந்து வெளியேறுவார் மணிஷ் திவாரி எனவும் கூறபப்பட்டு வருகிறது. தற்போது குலாம் நபி ஆசாத் வெளியேறிய நிலையில் மணிஷ்திவாரியின் இந்த கலகக் குரல் முக்கியத்துவமானதாக பார்க்கப்படுகிறது.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications