அம்மா பெயரில் மரக்கன்றுகள் நடுங்கள்- முதல் மன் கி பாத் வானொலி உரையில் பிரதமர் மோடி அழைப்பு!
டெல்லி: நாட்டின் பிரதமராக 3-வது முறை பதவியேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி தமது முதலாவது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று உரையாற்றினார். பிரதமர் மோடி தமது வானொலி நிகழ்ச்சி உரையில் லோக்சபா தேர்தலில் 65 கோடி பேர் வாக்களித்தது உலகின் மிகப் பெரிய நிகழ்வு என பெருமிதம் தெரிவித்தார். லோக்சபா தேர்தலை வெற்றிகரமாக நடத்திய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டும் தெரிவித்தார்.
பிரதமர் மோடி, ஒவ்வொரு மாத இறுதியிலும் மன் கி பாத் எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். லோக்சபா தேர்தல் நடைபெற்ற காலத்தில் மன் கி பாத் வானொலி உரை நிறுத்தப்பட்டிருந்தது.

மோடியின் 111-வது நிகழ்ச்சி: தற்போது நாட்டின் பிரதமராக 3-வது முறை பொறுப்பேற்ற பின்னர் இன்று முதலாவது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். இது பிரதமர் மோடி உரையாற்றும் 111-வது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி. இன்றைய நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நாட்டின் ஜனநாயக அமைப்பு, அரசியல் சாசனத்தின் மீது லோக்சபா தேர்தலில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி. 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தல்தான் உலகின் மிகப் பெரிய தேர்தல்.. உலகில் இதுவரை 65 கோடி பேர் வாக்களித்த தேர்தல் எங்குமே நடந்தது இல்லை. இத்தகைய சிறப்பு வாய்ந்த தேர்தலை நடத்திய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பாராட்டுகள் என்றார் பிரதமர் மோடி.
ஜார்க்கண்ட் போராளிகள்: மேலும் ஆங்கிலேயருக்கு எதிராக போராடிய ஜார்க்கண்ட் மாநிலத்தின் Veer Sidhu- Kanhu ஆகியோரையும் பிரதமர் மோடி இன்றைய மன் கி பாத் வானொலி உரையில் நிகழ்வு கூர்ந்தார். சந்தாலி பழங்குடி இனத்தைச் சேர்ந்த இருவரும் 1855-ல் ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு எதிராக வீரம் செறிந்த யுத்தம் நடத்தியதையும் பிரதமர் மோடி பெருமிதத்துடன் சுட்டிக்காட்டினார்.
மரக் கன்றுகள் நடுவோம்: உலக சுற்றுச் சூழல் தினத்தை குறிப்பிட்டுப் பேசிய பிரதமர் மோடி தாம் தாயார் பெயரில் ஒரு மரக்கன்று நட்டு வைத்தேன். அதேபோல நாட்டின் ஒவ்வொரு குடிமக்களும் தங்களது தாயார் பெயரில் ஒரு மரக்கன்று நட்டு வைக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி தமது மன் கி பாத் வானொலி உரையில் வேண்டுகோள் விடுத்தார்.
100-வது உரை: பிரதமர் நரேந்திர மோடி தமது 100-வது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் தமிழ் கலாச்சாரம் மற்றும் தமிழ் மொழி தொடர்பாக குறிப்பிட்டிருந்தார். அதில், உலகின் பழமையான மொழி நமது நாட்டில் தோன்றியது என்பதை நினைத்து ஒவ்வொரு இந்தியரும் பெருமைகொள்ள வேண்டும் என்று பெருமிதத்துடன் வலியுறுத்தினார். அழகான மொழியாகவும், உலகப் புகழ்பெற்ற மொழியாகவும் உள்ள தமிழ் மொழியைக் கற்கவில்லை என்பதற்காக வருத்தம் அடைவதாகவும் பிரதமர் அந்த உரையில் தெரிவித்திருந்தார். மேலும் வேலூரில் நாக நதியை மீட்டெடுத்து சீரமைக்க 20 ஆயிரம் பெண்கள் இணைந்து செயல்பட்டது, தூத்துக்குடி மாவட்டத்தில் புயல் தாக்கத்தைக் குறைத்து மண்வளத்தைக் காக்க பனைமரங்கள் நடப்படுவது போன்ற கூட்டு முயற்சிகளையும் பிரதமர் மோடி பாராட்டி இருந்தார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications