உத்தரகாண்ட் சுரங்க விபத்து: மீட்பு பணியில் இறங்கிய "எலி வளை" தொழிலாளர்கள்.. பணி என்ன தெரியுமா?
டேராடூன்: உத்தரகாண்ட் சுரங்கத்திற்குள் ஆட்களால் துளையிடும் பணியும் தொடங்கியுள்ளது. திங்கள் கிழமை மாலை 7 மணி அளவில் பணிகள் தொடங்கியது. எலி வளை சுரங்க தொழிலாளர்கள் (rat miners) என அழைக்கப்படும் தொழிலாளர்கள் மீட்பு பணியில் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலை சுரங்கப் பாதை தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். கடந்த 12-ம் தேதி வழக்கம் போல் முழு வீச்சில் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென எதிர்பாராத விதமாக இந்த சுரங்கத்திற்குள் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுமார் 41 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கினர்.

இதையடுத்து, சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை பத்திரமாக மீட்க தேசிய, மாநில பேரிடர் மீட்பு குழுக்குள் அங்கு குவிந்தன. சுரங்கத்தின் இடிபாடுகளில் துளையிட்டு, இரும்பு குழாய்களை செலுத்தி அதன் வழியே தொழிலாளர்களை மீட்க மீட்புக் குழுவினர் திட்டமிட்டனர். அதன்படி அமெரிக்க எந்திரம் மூலம் இடிபாடுகளில் துளையிடும் பணி தொடங்கி நடந்து வந்தது. எனினும், மீட்பு பணியில் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக தொழிலாளர்களை மீட்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.
ஆகர் எந்திரம்: சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு உணவு, ஆக்சிஜன் உள்ளிட்டவை குழாய் மூலமாக அனுப்பட்டு வருகிறது. தொழிலாளர்களை மீட்கும் பணி 2 வாரத்துக்கு மேலாக நீடிக்கிறது. துளையிடும் அமெரிக்க "ஆகர்" எந்திரத்தில் அடுத்தடுத்து ஏற் பட்ட பிரச்சினைகள், இடிபாடுகளின் இடையூறுகளால் துளையி டும் பணி தொடர்ந்து பின்னடைவை சந்தித்துள்ளது. இடிபாடுகள் இடையே சிக்கிய "ஆகர்" எந்திரத்தின் பிளேடுகளை வெட்டி எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பிளான் 'பி' நடவடிக்கையாக, சுரங்கப்பாதையின் மேலிருந்து செங்குத்தாக துளையிடும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. மொத்தம் 86 மீட்டர் தூரத்துக்கு துளையிட வேண்டியுள்ளது. நேற்று வரை 31 மீட்டருக்கு துளையிடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த துளை மூலம் 1.2 மீட்டர் விட்டம் கொண்ட குழாய்கள் செலுத்தப்பட்டு, அதன் வழியே தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் எனவும் அதிகாரிகள் கூறினர்.
எலி வளை சுரங்க தொழிலாளர்கள்: இதற்கிடையில் சுரங்கப்பாதைக்குள் ஆட்களால் துளையிடும் பணியும் தொடங்கியது. அதற்காக "எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள்" எனப்படும் சிறிய குகைக்குள்ளும் சென்றும் துளையிடும் அனுபவம் வாய்ந்த 6 சுரங்கப்பணியாளர்கள் குகைப்பகுதிக்கு வந்தனர். இதற்கிடையில் சுரங்கப்பாதைக்குள் ஆட்களால் துளையிடும் பணியும் தொடங்கியது.
அதற்காக "எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள்" எனப்படும் சிறிய குகைக்குள்ளும் சென்றும் துளையிடும் அனுபவம் வாய்ந்த 6 சுரங்கப்பணியாளர்கள் குகைப்பகுதிக்கு வந்தனர். இந்த தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் உள்ள 800 மி.மீ. விட்டமுள்ள குழாய்க்குள் சென்று, இடிபாடுகளை வெட்டி அகற்றுவார்கள். அவர்கள் தலா 3 பேர் வீதம் இந்த பணியில் ஈடுபடுவார்கள்.
மூன்று ஷிப்ட்களாக: ஆட்கள் இடிபாடுகளை அகற்றுவது நேரம் பிடிக்கும் பணி என்றாலும், வெறும் 10 முதல் 12 மீட்டர் தூரமே துளையிட வேண்டியுள்ள நிலையில், இது ஒன்றுதான் சாத்தியமான வழி என அதிகாரிகள் கூறினர். மேலும், உத்தரகாண்ட் அரசின் செயலளர் நீரஞ் கைர்வால் கூறுகையில், எலி வளை தொழிலாளர்கள் (Rat Miners) 24 பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
24 மணி நேரமும் இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெறும். மூன்று ஷிப்ட்களாக இந்த தொழிலாளர்கள் பணியாற்றுவார்கள். ஆகர் இயந்திரம் சீர் செய்யப்பட்ட பிறகு, 800 எம் எம் பைப் உள்ளே செலுத்தும் பணி தொடங்கும்" என்றார். எனினும், தொழிலாளர்களை மீட்கும் பணி எப்போது நிறைவு பெறும் என்பது குறித்து உரிய கால அளவு எதையும் சொல்ல அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications