மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வழக்கு: பாதிரியார் ஸ்டேன் சுவாமியை தொடர்ந்து பேராசிரியர் சாய்பாபா மரணம்!
டெல்லி: மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 8 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்ட டெல்லி பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியரான ஜிஎன் சாய்பாபா உடல்நலன் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். மாற்றுத் திறனாளியான சக்கர நாற்காலியை மட்டுமே பயன்படுத்திய நிலையிலும் சிறையில் அடைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பேராசிரியர் ஜிஎன் சாய்பாவின் மரணம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி பல்கலைக் கழக பேராசிரியராகப் பணியாற்றியவர் ஜிஎன் சாய்பாபா. மாற்றுத் திறனாளி என்பதால் சக்கர நாற்காலியை மட்டுமே பயன்படுத்தி வந்தவர். பழங்குடி மக்கள் உரிமை, பழங்குடிகளின் வாழ்விடமான மலைகளில் சுரங்கங்களை பெருநிறுவனங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு, மாவோயிஸ்டுகள் வேட்டை என்ற பெயரில் பழங்குடிகள் படுகொலைக்கு எதிர்ப்பு ஆகிய களங்களில் செயல்பட்டவர் பேராசிரியர் ஜிஎன் சாய்பாபா. மாவோயிஸ்டுகளுக்கு எதிரான பாதுகாப்புப் படையினரின் Operation Green Hunt-க்கு எதிராக தீவிரமாக குரல் கொடுத்தவர் ஜிஎன் சாய்பாபா. இந்த போராட்டங்கள் தொடர்பான கூட்டமைப்பின் தலைவராகவும் பேராசிரியர் ஜிஎன் சாய்பாபா செயல்பட்டார். இதனால் அரசுக்கு கடும் நெருக்கடி உருவானது.

இதனையடுத்து பேராசிரியர் ஜிஎன் சாய்பாபாவுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் தொடர்பிருப்பதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஊபா எனப்படும் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பேராசிரியர் ஜிஎன் சாய்பாபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் சாய்பாபாவுக்கு 2017-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
5 வருட சிறைக்கு பின்.. உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஜி.என் சாய்பாபா விடுதலை
இந்த தண்டனையை எதிர்த்து சாய்பாபா தொடர்ந்த வழக்கை விசாரித்த மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பெஞ்ச் அவரை விடுதலை செய்தது. ஆனால் 24 மணிநேரத்தில் உச்சநீதிமன்றம் இந்த விடுதலைத் தீர்ப்பை ரத்து செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ச்சியான சட்டப் போராட்டங்களுக்குப் பின்னர் கடந்த மார்ச் மாதம் சாய்பாபா விடுதலை செய்யப்பட்டார். மாற்றுத் திறனாளியாக சக்கர நாற்காலியை மட்டுமே பயன்படுத்தக் கூடிய நிலையிலும் 8 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார் பேராசிரியர் சாய்பாபா.
சிறையில் இருந்து விடுதலையான பின்னர் பித்தப்பை தொடர்பான சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணம் அடைந்தார். பேராசிரியர் சாய்பாபாவின் மரணம் தற்போது விவாதப் பொருளாகி இருக்கிறது.
அமெரிக்காவில் எதிரொலிக்கும் பாதிரியார் ஸ்டேன் சுவாமி மரணம்.. விசாரணை கோரி நாடாளுமன்றத்தில் தீர்மானம்
ஸ்டேன் சுவாமி: இதேபோல மகாராஷ்டிரா மாநிலம் பீமாகோரேகான் வழக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமி, பழங்குடி மக்களின் உரிமைக்காக போராடியதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மாவோயிஸ்டுகள் இயக்கத்துடன் பாதிரியார் ஸ்டான் சுவாமிக்கு தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு அவர் மீது பயங்கரவாத தடுப்பு சட்டம் பாய்ந்தது. பார்க்கின்ஸ் எனப்படும் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சிறையில் இருந்தே சிகிச்சை பெறுவதற்காகவும் கூட சட்டப் போராட்டங்களை நடத்தினார் பாதிரியார் ஸ்டேன் சுவாமி. நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் சிகிச்சை பெற்ற நிலையில் மருத்துவமனையிலேயே பாதிரியார் ஸ்டேன் சுவாமி உயிரிழந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பழங்குடிகளின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு என்கிற குற்றச்சாட்டின் கீழ் சிறைப்படுத்தப்பட்ட பாதிரியார் ஸ்டேன் சுவாமி உயிரிழப்பைத் தொடர்ந்து அதே போன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு 8 ஆண்டு சிறைவாசம் அனுபவித்து விடுதலையான நிலையில் மாற்றுத் திறனாளி பேராசிரியர் ஜிஎன் சாய்பாபா மரணம் அடைந்திருப்பது மனித உரிமை ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications