ஸ்டேன் சாமிக்கு உரிய சிகிச்சை தரப்பட்டது.. ஐநா மனித உரிமை ஆணையத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை பதில்!
டெல்லி: ஸ்டேன் சாமிக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு, அவரின் உடல்நிலை நீதிமன்றம் மூலம் தொடர்ந்து கவனிக்கப்பட்டது என்று இந்திய வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.
2018ல் பீமா - கொரேகான் வன்முறையை தூண்டியதாகவும், எல்கார் பரிஷத் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசி அதன் மூலம் வன்முறையை ஏற்படுத்தியதாக ஸ்டோன் சாமி கடந்த வருடம் கைது செய்யப்பட்டார். உடல்நிலை மோசமானதை அடுத்து இவர் கடந்த சில வாரமாக தீவிரமாக சிகிச்சை பெற்று வந்தார்.

பெயில் கிடைக்காத நிலையில் நேற்று மருத்துவமனையில் இவர் மரணம் அடைந்தார். இந்த நிலையில் ஸ்டேன் சாமியின் மரணத்திற்கு உலகம் முழுக்க இருக்கும் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
ஐநாவின் மனித உரிமை அமைப்பின் உயர் கமிஷ்னர் லிஸ் த்ரோசல் ஸ்டேன் சாமியின் மறைவிற்கு வருத்தம் தெரிவித்து இருந்தார். ஸ்டேன் சாமி கஸ்டடியில் மறைந்தது வருத்தத்தையும், கவலையையும் உண்டாக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் ஐநா மற்றும் ஐரோப்பா யூனியன் அமைப்பின் பல்வேறு ஸ்டேன் சாமியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து, இது மிகவும் வருத்தமான செய்தி என்று தெரிவித்துள்ளது. பாதிரியார் ஸ்டான் ஸ்வாமியின் மரணம் வேதனையளிக்கிறது, கருத்து சுதந்திரம் என்னும் உரிமையை யாரும் தவறாக பயன்படுத்த கூடாது என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் இரங்கல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஐநா உள்ளிட்ட உலக அமைப்புகளின் கருத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், ஸ்டேன் சாமிக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு, அவரின் உடல்நிலை நீதிமன்றம் மூலம் தொடர்ந்து கவனிக்கப்பட்டது. சட்டத்திற்கு உட்பட்டுதான் ஸ்டேன் சாமி என்ஐஏ மூலம் கைது செய்யப்பட்டார். இவருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு பிரிவு காரணமாக, இவரின் பெயில் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இந்த வழக்கில் முறையாக நீதி கடைபிடிக்கப்பட்டது. இதில் எங்கும் சட்டம் மீறப்படவில்லை. அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள பல்வேறு மனித உரிமை ஆணையங்கள் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தன. அவரின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது.சுதந்திரமிக்க சட்டத்துறை மூலம் மட்டுமே அனைத்து வித நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன என்று இந்தியா விளக்கம் கொடுத்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications