"ரொம்ப குண்டா இருக்கா..!" மனைவியை வீட்டை விட்டு வெளியே துரத்தி.. விவகாரத்து கோரிய கொடூர கணவன்
டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலத்தில் மிகவும் விசித்திரமான காரணத்திற்காகக் கணவர் ஒருவர் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. திருமணமான பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளும் கூட அவர்களுக்குக் கிடைப்பதில்லை.
சில கணவர்கள் செய்யும் அனைத்து விதமான கொடுமைகளையும் பொறுத்துக் கொண்டே இருக்க வேண்டிய சூழலுக்குப் பெண்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.

உத்தரப் பிரதேசம்
இந்தச் சூழலில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மிகவும் விசித்திரமான காரணத்திற்காகக் கணவர் ஒருவர் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். பல்வேறு காரணங்களுக்காக விவாகரத்து பெறலாம் என்றாலும் கூட இந்த நபர் கூறிய காரணம் அதிரச் செய்துள்ளது. அதாவது திருமணத்திற்குப் பிறகு உடல் எடை அதிகரித்ததால், மனைவியை வீட்டை விட்டு வெளியேற்றிய கணவரை இதையே காரணமாகக் கூறி விவகரத்துக் கோரியுள்ளார்.

அவமானப்படுத்திய கணவர்
உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரூட்டை சேர்ந்தவர் சல்மான். இவருக்கும் நஸ்மா என்ற பெண்ணுக்கும் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்தத் தம்பதிக்கு 7 வயதில் ஆண் சிறுவனும் உள்ளது. குழந்தை பிறப்பிற்குப் பின்னர் நஸ்மாவின் உடல் எடை அதிகரித்து உள்ளது. இதனால் சில காலமாகவே சல்மான் தனது உடல் எடையை வைத்து அவமானப்படுத்தியதாக நஸ்மா தெரிவித்துள்ளார்.

தாக்குதல்
அவமானப்படுத்தியது மட்டுமின்றி பல நேரங்களில் கொடூரமாக அடித்தும் உள்ளார். இருவருக்கும் இடையே தொடர்ந்த இந்தச் சண்டை கடந்த மாதம் முற்றியுள்ளது. இதையடுத்து நஸ்மாவை வீட்டை விட்டு வெளியேற்றிய சல்மான், விவாகரத்து கோரி ஆவணங்களையும் அனுப்பி உள்ளார். நஸ்மாவின் உடல் எடை காரணமாகவே இருவருக்கும் இடையே பல நேரங்களில் சண்டை ஏற்பட்டு உள்ளது.

விவாகரத்து
நஸ்மாவை உடல் எடையை வைத்து அவமானப்படுத்தும் சல்மான், இப்படி அதிக உடல் எடை கொண்ட பெண்ணுடன் வாழ முடியாது என்று கூறி சண்டை போட்டுள்ளார். இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண் நஸ்மா கூறுகையில், "என் உடல் எடை கூடிவிட்டதால் என்னுடன் வாழ விரும்பவில்லை என்று அவர் கூறினார். அந்த நபர் ஏற்கனவே விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். எனக்கு விவாகரத்தில் நாட்டமில்லை. அவருடன் இணைந்து வாழவே விருப்பம்" என்றார்.

கண்ணீர்
கணவரின் இந்த செயலால் நடு ரோட்டில் நிற்பதாகவும் இது குறித்து புகார் அளிக்கக் கேட் காவல் நிலையத்துக்குச் சென்றும் பலனில்லை என்றும் தெரிவித்தார். இருப்பினும், இது தொடர்பாகப் புகார் எதுவும் வரவில்லை என போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர்கள், "இந்த விவகாரத்தில் எங்களுக்குப் புகார் எதுவும் வரவில்லை. புகார் கிடைத்தால் உரிய முறையில் விசாரணை செய்து நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்" என்றார்.
-
"மதம் மாறினால் பதவி உயர்வு!" நாசிக் ஐடி நிறுவனத்தில் பெண் ஊழியருக்கு கொடுமை.. அமைச்சர் ஆவேசம்! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை!












Click it and Unblock the Notifications