டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"போட்றா வெடிய".. 4% உயர்ந்தது அகவிலைப்படி.. அமைச்சரவை ஒப்புதல்.. மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தி அறிவிப்பு வெளியாகி உள்ளது

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை (DA HIKE) 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக மத்திய அமைச்சரவை இன்று உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.. இதனால், 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும், 62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலனடைய போகிறார்கள் என்பதால், மிகுந்த குஷியில் ஊழியர்கள் திளைத்து வருகிறார்கள்.

கடந்த வாரம் ஒரு தகவல் வெளியாகி இருந்தது.. அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர போவதாக கூறப்பட்டது.
எப்போதுமே ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது... அதாவது, அகவிலைப்படி உயர்வு ஆண்டுக்கு 2 முறை அரசால் அறிவிக்கப்படுவது வழக்கம்.. அந்தவகையில் ஊழியர்களும் இப்போது 34 சதவீத அகவிலைப்படியை பெற்று வருகிறார்கள்.

ரேசன் கடைகளில் இலவச அரிசி திட்டம்.. 2022 டிசம்பர் வரை நீட்டிப்பு - மத்திய அரசு அறிவிப்பு ரேசன் கடைகளில் இலவச அரிசி திட்டம்.. 2022 டிசம்பர் வரை நீட்டிப்பு - மத்திய அரசு அறிவிப்பு

பென்ஷன்

பென்ஷன்

இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி, 4 சதவீதம் அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், விரைவில் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.. ஒருவேளை இந்த அறிவிப்பு அமலாக்கும் பட்சத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு இனிமேல், 38 சதவீத அகவிலைப்படி கிடைக்கும் என்றும் நம்பப்பட்டது.. அதுமட்டுமல்ல, இதனால் 40 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 50 லட்சம் பென்ஷன்தாரர்களும் பயன்பெறுவார்கள் என்றும் சொல்லப்பட்டது.

 அமைச்சர் அதிரடி

அமைச்சர் அதிரடி

அந்தவகையில், இன்றைய தினம் சூப்பர் அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.. டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது.. இந்த கூட்டத்திற்கு பிறகு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது, "அகமதாபாத் மற்றும் சிஎஸ்எம்டி, மும்பை ஆகிய 3 முக்கிய ரயில் நிலையங்களை மறுபடியும் மேம்படுத்துவதற்கான இந்திய ரயில்வேயின் முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டமானது சுமார் 10,000 கோடி ரூபாய் முதலீட்டை உள்ளடக்கியது.

அறிவிப்பு

அறிவிப்பு

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை அதாவது DA 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.. பிரதமர் மோடியின் கரீப் கல்யாண் அன்ன யோஜனதா திட்டத்தின் கொரோனா காலத்தில் இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டது. அந்த நடைமுறை அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

 செம லாபம்

செம லாபம்


அதாவது, ஒரு ஊழியரின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000 என்றால், அவருடைய மொத்த DA ரூ.6,840 ஆக இருக்கும்... இப்போது கூடுதலாக மாதம் ரூ.720 லாபம் கிடைக்க போகிறது.. அதேபோல, ஒருவரது அதிகபட்ச அடிப்படை சம்பளம் ரூ.56,900ல் இருந்து 34 சதவீதம் என்ற விகிதத்தில், அகவிலைப்படி ரூ.19,346 ஆக உள்ளது.. அது இப்போது 38 சதவீத டிஏ உயர்வு அடிப்படையில் ரூ.21,622 ஆக அதிகரித்துள்ளது.

பூரிப்பு

பூரிப்பு

இந்த அறிவிப்பானது, மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது... காரணம், அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டன முலம் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படி 34 சதவிதமாக இருந்த நிலையில், அது இப்போது 4 சதவீதம் உயர்த்திய பிறகு, 38 சதவீதமாக அதிகரித்துள்ளது.. அதேபோல, 2022, ஜூலை 1ம் தேதியை அடிப்படையாக கொண்டு இந்த அகவிலைப்படி வழங்கப்படுகிறது.. 7வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி இந்த அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Mega Announcement and 4% Dearness Allowance hike, festive cheer for 47 lakh Central Government Employees
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X