நாய் செத்தால் கூட வருந்துவார்கள்.. 600 விவசாயிகள் சாவை பாஜக கண்டுக்கொள்ளவில்லை...ஆளுநர் மாலிக்
டெல்லி: கடந்த சில நாட்களாக மத்திய அரசுக்கு எதிராக சில கருத்துக்களை தெரிவித்து வரும் மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக் விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டு, மாநில அந்தஸ்து நீக்கப்பட்ட போது அங்கு ஆளுநராக இருந்தவர் ஆளுநர் சத்ய பால் மாலிக். தேசிய அளவில் அப்போது ஆளுநர் சத்ய பால் மாலிக் கவனிக்கப்பட்டார்.
அதன்பின் கோவா ஆளுநராக நியமிக்கப்பட்டவர், தற்போது மேகாலயா ஆளுநராக ஆளுநர் சத்ய பால் மாலிக் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில்தான் மத்திய அரசு குறித்து கடும் விமர்சனம் ஒன்றை ஆளுநர் சத்ய பால் மாலிக் வைத்துள்ளார்.

மேகாலயா
மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக் வைத்துள்ள விமர்சனத்தில், டெல்லியில் இருக்கும் அரசியல் தலைவர்கள் ஒரு நாய் இறந்தால் கூட அதற்கு இரங்கல் தெரிவிக்கிறார்கள். ஆனால் விவசாயிகள் மரணத்திற்கு யாரும் இரங்கல் தெரிவிக்கவில்லை. விவசாய போராட்டத்தில் 600 விவசாயிகள் வரை மரணம் அடைந்தனர். ஆனால் அவர்களுக்கு யாரும் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை.

இரங்கல்
எனக்கு பதவி மீதான பற்று கிடையாது. நான் பதவி போய்விடுமே என்று அச்சப்படவில்லை. என் பதவி பறிக்கப்பட்டால் பறிக்கப்படட்டும். பிரதமர் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட போது இஸ்லாமியர்களை கெட்டவர்களாக வர்ணித்தது போல இப்போதும் செய்கிறார்கள். செங்கோட்டையில் சுதந்திர தினத்தின் போது விவசாயிகள் போராடியதை விமர்சனம் செய்கிறார்கள்.

பதவி
ஜாட் இன மக்களுக்கும், சீக்கியர்களுக்கு செங்கோட்டையில் கொடி ஏற்ற எல்லா உரிமையும் உள்ளது. அவர்களுக்கு இல்லாத உரிமையா? செங்கோட்டையில் விவசாயிகள் போராட்டம் நடத்தியதை தவறாக சித்தரிக்கிறார்கள். இந்த அரசில் சிலர் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக இருக்கிறார்கள். சிலர் இதை கடுமையாக எதிர்க்கிறார்கள்.

டெல்லி
டெல்லியில் போராடும் விவசாயிகள் வெறும் கையோடு திரும்ப மாட்டார்கள். அவர்கள் வெற்றியோடுதான் திரும்புவார்கள். ஒரு அநீதி இழைக்கப்படும் போது அதற்கு எதிராக மக்கள் போராடவே செய்வார்கள். விவசாயிகளின் மகன்கள் பலர் ராணுவத்தில் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களையும் இந்த போராட்டங்கள் பாதித்து உள்ளது என்று ஆளுநர் சத்ய பால் மாலிக் தெரிவித்துள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications