கடன் மோசடி.. இந்தியாவுக்கு நாடு கடத்துவதை தடுக்க மாஸ்டர் பிளான் போட்ட மோசடி மன்னன் மெகுல் சோக்சி
டெல்லி: இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை தவிர்க்கும் வகையில் இந்திய குடியுரிமையை மெகுல் சோக்சி ஒப்படைத்தார்.
பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்சியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்தது கடந்த சில மாதங்களுக்கு முன் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் வெளிநாடுகளில் தப்பி ஓடிவிட்டனர்.

கீதாஞ்சலி குழும உரிமையாளரான மெகுல் சோக்சி, ஆண்டிகுவாவில் இருப்பது தெரியவந்தது. அவரை இந்தியா கொண்டு வரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. குற்றவாளிகளை நாடு கடத்தும் ஒப்பந்தம் ஆண்டிகுவாவுடன் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் சோக்சியை இந்தியா கொண்டு வருவதில் சிக்கல் நீடிக்கிறது.
அவரிடம் ஆண்டிகுவா மற்றும் இந்தியாவின் குடியுரிமைகள் இருந்தன. ஒருவர் இரு குடியுரிமையை வைத்திருக்க கூடாது என்ற சட்டம் உள்ளது. இந்த நிலையில், சோக்சி தனது இந்திய குடியுரிமையை விடுவதற்கு முடிவு செய்து தனது இந்திய பாஸ்போர்ட்டை ஆண்டிகுவாவில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒப்படைத்துள்ளார்.
ஏராளமான வங்கி மோசடிகளில் சோக்சி ஈடுபட்டுள்ளதால் அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதனால் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை தடுக்க இந்திய குடியுரிமையை ஒப்படைத்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications