கையில் ரத்தக் கட்டு.. வீங்கி சிவந்த கண்களுடன் டொமினிகா சிறையில் காட்சியளிக்கும் மெகுல் சோக்ஷி!
டெல்லி: பிரபல வைர வியாபாரியான நீரவ் மோடியின் உறவினரான மெகுல் சோக்ஷி டொமினிகா சிறையில் கண்கள் சிவந்தும் கைகளில் ரத்தக் காயத்துடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
நீரவ் மோடியும் மெகுல் சோக்ஷியும் இணைந்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ 13 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் பெற்றுக் கொண்டு கடனை திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுவிட்டனர்.
வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித் துறை உள்ளிட்டவை விசாரணையை மேற்கொண்டது. நீரவ் மோடி லண்டனில் வழக்கு விசாரணையை எதிர் கொண்டு வருகிறார்.

மெகுல் சோக்ஷி
அதே நேரம் மெகுல் சோக்ஷி கரீபியன் தீவுகளில் ஒன்றான ஆண்டிகுவா நாட்டில் தலைமறைவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அந்த நாட்டில் 2018ஆம் ஆண்டு அவர் குடியுரிமையையும் பெற்றுக் கொண்டார். தேடப்படும் நபர்களை நாடு கடத்தல் தொடர்பாக இந்தியா மேற்கொண்ட நாடுகளின் ஒப்பந்த பட்டியலில் ஆண்டிகுவா இல்லை.

மாயம்
எனினும் அவரை நாடு கடத்துதல் தொடர்பான முயற்சிகளில் இந்திய விசாரணை முகமைகள் ஈடுபட்டுள்ளன. மெகுல் சோக்ஷிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸும் இண்டர்போல் விடுத்தது. இந்த நிலையில் ஆண்டிகுவாவில் இருந்த சோக்ஷி திடீரென அங்கிருந்து மாயமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டொமினிகா
அதே போல் இவர் பர்புடாவில் இருப்பதாக தகவல் வந்த நிலையில் அங்கும் அவரை காணவில்லை. டொமினிகா தீவில் இருந்த சோக்ஷி கடந்த 26ஆம் தேதி அதிரடியாக இன்டர்போல் போலீஸால் கைது செய்யப்பட்டார். அவர் டொமினிகாவில் போலீஸ் காவலில் உள்ளார்.

போலீஸ் காவல்
புதன்கிழமை வரை போலீஸ் காவலில் உள்ள அவருக்கு கொரோனா சோதனையும் மருத்துவ பரிசோதனையும் எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. சோக்ஷி கைதானவுடன் அவரை தங்கள் நாட்டுக்கு அழைத்து செல்ல ஆன்டிகுவா பிரதமர் மறுத்துவிட்டார்.

பிரதமர்
சோக்ஷியை இந்தியாவுக்கு அனுப்ப இந்திய அரசுடனும் டொமினிகா அரசுடனும் ஆன்டிகுவா பிரதமர் காஸ்டன் பிரவுனி உத்தரவிட்டுள்ளார். டொமினிகா சிறையில் சோக்ஷி இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. இதில் அவரது கண்கள் வீங்கி சிவப்பாக இருக்கிறது. கைகளில் ரத்தக் கட்டு இருக்கிறது. எனவே இவர் போலீஸாரால் துன்புறுத்தப்பட்டிருக்கலாம் என அவரது வழக்கறிஞர் புகார் கூறுகிறார்.

மெகுல் மீது போலீஸ் தாக்குதலா
இதுகுறித்து வழக்கறிஞர் விஜய் அகர்வால் கூறுகையில் ஆன்டிகுவாவிலிருந்து சோக்ஷியை போலீஸார் வலுக்கட்டாயமாக டொமினிகாவுக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆன்டிகுவாவின் ஜாலி ஹார்பர் பகுதியில் அவரை நிறைய பேர் பார்த்துள்ளார்கள். அதன்பிறகுதைான் அவர் டொமினிகாவுக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரது உடலில் உள்ள காயங்கள் குறித்து நீதிமன்றத்தில் கூறியுள்ளேன். விரைவில் அவரை ஆன்டிகுவா சிறைக்கு மாற்ற முயற்சிக்கிறோம் என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications