டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வடஇந்தியர்களின் மென்டாலிட்டி சரியில்லை! அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை! ஓப்பனாக விளாசிய சரத் பவார்!

Google Oneindia Tamil News

டெல்லி: தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான சரத் பவார், முக்கிய விவகாரத்தில் வட இந்தியாவின் மன நிலை எப்படி உள்ளது என்பது குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவராக உள்ளவர் சரத் பவார். நாட்டின் மிக மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான சரத் பவார் தான், ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே நேற்றைய தினம் முக்கிய விவகாரம் ஒன்றில் வட இந்தியாவின் மனநிலை எப்படி உள்ளது என்பது குறித்து அவர் கூறியுள்ள கருத்துகள் பரபரப்பைக் கிளப்பி உள்ளது.

களமிறக்கப்பட்ட தனி டீம்.. கண்காணிப்பில் நிர்வாகிகள்! கர்நாடக தேர்தலுக்கு பக்காவாக இறங்கும் காங்கிரஸ்களமிறக்கப்பட்ட தனி டீம்.. கண்காணிப்பில் நிர்வாகிகள்! கர்நாடக தேர்தலுக்கு பக்காவாக இறங்கும் காங்கிரஸ்

 சரத் பவார்

சரத் பவார்

அடுத்த மக்களவை தேர்தல் 2024ஆம் ஆண்டில் தான் நடைபெறுகிறது. அதற்கு இன்னும் இரு ஆண்டுகள் இருந்தாலும் கூட இப்போதே தேர்தல் பணிகளைப் பல அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன. பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரே அணியில் திரட்டும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அப்படி ஒரே அணியில் எதிர்க்கட்சிகள் இணைந்தால், சரத் பவார் அல்லது நிதிஷ்குமார் போன்ற மூத்த தலைவர்கள் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.

 மும்பை நிகழ்ச்சி

மும்பை நிகழ்ச்சி

இதனிடையே மக்களவை மற்றும் சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் வட இந்தியாவின் மனநிலை ஒத்துழைக்கவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்தார். புனே டாக்டர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், அவரது மகள் சுப்ரியா சூலே எம்பி உடன் சரத் பவார் கலந்து கொண்டார். அங்கு நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாகக் கேள்வி கேட்கப்பட்டது.

 பெண்கள் இட ஒதுக்கீடு

பெண்கள் இட ஒதுக்கீடு

அதற்குப் பதில் அளித்த அவர், "இட ஒதுக்கீடு மசோதா இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இது பெண்களை ஏற்றுக்கொள்ள நாடு இன்னும் மனதளவில் தயாராக இல்லை என்பதைக் காட்டுகிறது. நான் காங்கிரஸ் மக்களவை எம்.பி.யாக இருந்தது முதலே இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விரிவாகக் குறித்துப் பேசி வருகிறேன். ஆனாலும், கூட இன்னும் இந்த மசோதா நிறைவேறவில்லை..

 மனநிலை சரியில்லை

மனநிலை சரியில்லை

நாடாளுமன்றத்தில் குறிப்பாக வட இந்தியர்களின் மனநிலை (இந்த விவகாரத்தில்) சரியாக இல்லை. நான் காங்கிரசில் லோக்சபா எம்.பி.யாக இருந்தபோது, ​​நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு பிரச்சினை குறித்துப் பேசியது எனக்கு நினைவிருக்கிறது. ஒருமுறை எனது உரையை முடித்துவிட்டுத் திரும்பிப் பார்த்தேன். எனது கட்சியைச் சேர்ந்த பெரும்பான்மையான எம்.பி.க்கள் கூட அங்கு இல்லை. அவர்கள் கூட எழுந்து சென்றுவிட்டனர்.

 ஜீரணிக்க முடியவில்லை

ஜீரணிக்க முடியவில்லை

அதாவது எனது கட்சியைச் சேர்ந்தவர்களுக்குக் கூட பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்பதை ஜீரணிக்க முடியவில்லை. இந்த மசோதாவை நிறைவேற்ற அனைத்து கட்சிகளும் முயற்சி செய்ய வேண்டும். நான் மகாராஷ்டிரா முதல்வராக இருந்த போது, உள்ளாட்சியில் பெண்களுக்கு இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தேன். அதற்கு முதலில் சில எதிர்ப்புகள் வந்த போதும் பின்னர் ஏற்றுக் கொண்டனர்" என்று அவர் தெரிவித்தார்.

English summary
NCP chief questions Mentality Of North India in Women's Quota: Sharad Pawar attacks Parliament for not giving Women's Quota.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X