ஜிஎஸ்டி.. கடைகளில் பில் கேட்டு வாங்குங்க.. ரூ.1 கோடி வரை பரிசு .. உங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கலாம்
டெல்லி: நீங்கள் கடைகளில் வாங்கும் பொருளுக்கு ஜிஎஸ்டி வரி பிடித்தம் செய்கிறார்கள் என்றால், அதற்கு உரிய பில்லை கேட்டு வாங்குங்கள். உங்கள் பில்லை மொபைல் ஆப்பில் பதிவிட்டால், மாதம் 10 லடசம் வரை பரிசு தரப்போகிறது மத்திய அரசு. காலாண்டுக்கு ஒரு முறை ஒரு கோடி வரை பரிசு தரவும்முடிவு செய்துள்ளதாம்.
நாடு முழுதும், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை கடந்த 2017ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருக்கிறது. பல அடுக்கு நேரடி வரிவிதிப்பை தவிர்த்துவிட்டு ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்யப்பட்ட எல்லா தொழில்களும் ஒரு இன்வாய்ஸை வழங்குவதே இந்த வரிவிதிப்பின் நோக்கம் ஆகும்.

ஆனால் இதில் வணிகர்கள் வரிஏய்ப்பு செய்வது அரசுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. போலி பில்களை கொடுத்து ஏமாற்றுவதாகவும், ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ய சில நுணுக்கமான வேலைகளை சில வணிகர்கள் செய்வதாகவும் புகார்கள் உள்ளது.
அந்த இன்வாய்ஸில் செல்லத்தக்க GSTIN, அதன் பிரேக்அப்பில் GST, Central GST மற்றும் State GST தராமல் ஏமாற்றுவதாக புகார்கள் உள்ளது. வரி பெயரில் வாடிக்கையாளர்கள் செலுத்தும் பணத்தை போலியாக உருவாக்கப்படுவதாவும், இந்த போலி இன்வாய்ஸ்கள் மூலம் பல கோடி ரூபாய் வரி மோசடி நடப்பதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதை தடுக்க, மத்திய அரசு பல கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
ஒரு இன்வாய்ஸ் அல்லது கடைக்காரர் வரும் ஜிஎஸ்டி பில் சரியானதா அல்லது போலியானதா என்பதை அறிய மத்திய அரசின் ஜிஎஸ்டி போர்ட்டலில் நிச்சயம் பார்க்க முடியிம். ஜிஎஸ்டியின் www.gst.gov.in என்ற வெப்சைட்டில் இன்வாய்சின் வேலிடிட்டியை சரி பார்க்க இயலும். இந்நிலையில் ஜிஎஸ்டி பில்லை மக்கள் கட்டாயம் பெற வேண்டும் என்ற நோக்கில் அரசு ஒரு மக்களுக்கு பரிசு திட்டங்களை அறிவித்துள்ளது.
இந்த திட்டம் எப்படி என்பதை பார்ப்போம்.. வணிகத்தில் இருந்து வணிகத்துக்காக செய்யப்படும் பி - 2 - பி பரிவர்த்தனைகளுக்கு, மின்னணு பில் தருவது கட்டாயம் ஆகும். இதனிடையே பி - 2 - சி எனப்படும் வணிகர்களிடமிருந்து நுகர்வோர் வாங்கும் பொருளுக்கான வரி, முறையாக செலுத்தப்படுவதை உறுதி செய்ய, மத்திய அரசு அதிரடி திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.
'மேரா பில் மேரா அதிகார்' எனப்படும், என்னுடைய பில், என்னுடைய அதிகாரம் என்ற பெயரில், இந்த திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிவிக்க உள்ளதாம். இந்த திட்டத்தின்கீழ், பொதுமக்கள் தங்களுடைய செல்போன் செயலி வாயிலாக, வாங்கிய பொருளுக்கான பில்லை பதிவிட்டால் போதும். குறைந்தபட்சம், 200 ரூபாய்க்கான பில்லாக இருக்க வேண்டும். ஒரு மாதத்தில் ஒருவர் அதிக பட்சம், 25 பில்களை இதில் பதிவிட வாய்ப்பு தரப்படுகிறது.
மாதத்தில், 500 முறை, கம்ப்யூட்டர் வாயிலாக குலுக்கல் நடத்தப்பட்டு, தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு பரிசுகள் வழங்கப்படும். இதன்படி, ஒரு மாதத்தில், அதிகபட்சமாக, 10 லட்சம் ரூபாய் வரை பரிசுகள் ஜிஎஸ்டி பில்லை பதிடுவோருக்கு வழங்கப்பட உள்ளது.
இதேபோல், காலாண்டுக்கு ஒருமுறை சிறப்பு குலுக்கல் நடத்தப்பட உள்ளதாம். இதில் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு, 1 கோடி ரூபாய் பரிசாக கிடைக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் சொல்கின்றன.
ஏன் இந்த 'மேரா பில் மேரா அதிகார்' புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றால், தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு பில்களை மக்கள் கேட்டு வாங்க வேண்டும் என்றும் அதேபோல், வணிகர்கள், வர்த்தகர்கள் முறையாக வரி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் அதுவும் மிகவும் நோக்கம். அதற்காகவே 'மேரா பில் மேரா அதிகார்' என்ற இந்த இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் இதற்கான அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications