இந்திய தேர்தலில் இடையூறு.. ஏஐ டெக்னாலஜியை வைத்து சீனா சதி திட்டம்? மைக்ரோசாப்ட் வெளியிட்ட ஷாக் தகவல்
டெல்லி: இந்தியாவில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலின் முடிவுகளை தங்கள் நலனுக்கு ஏற்றவாறு மாற்ற செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் மூலமாக சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள், கண்டெண்ட்கள் ஆகியவற்றை பரப்ப சீனாவின் சைபர் குழுக்கள் திட்டமிட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் எச்சரித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் லோக்சபா பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. ஜனநாயக திருவிழா என்று அழைக்கப்படும் இந்த தேர்தலில் சுமார் 92 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளனர். உலகின் முன்னணி நாடாகவும் பொருளாதாரத்தில் 5-வது பெரிய நாடாகவும் இருக்கும் இந்தியாவின் பொதுத்தேர்தலை உலக நாடுகள் உற்று பார்த்து வருகின்றன.

அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 01 ஆம் தேதி வரை நாட்டில் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 04 ஆம் தேதி எண்ணப்படுகின்றன.
64 நாடுகளில் தேர்தல்: இந்தியா மக்கள் மட்டும் இன்றி மொத்த உலகமும் இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகள் ஆளப்போவது யார்? என்பதை எதிர்பார்த்து உள்ளன. இந்த ஆண்டில் இந்தியா மட்டும் இன்றி கிட்டத்தட்ட 64 நாடுகளில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இவற்றில் அமெரிக்கா, தென்கொரியாவும் அடங்கும். உலக மக்கள் தொகையில் 49 சதவீதம் கொண்ட மக்கள் இந்த ஆண்டில் தேர்தலை சந்திக்கிறார்கள். எனவே, இந்த ஆண்டு தேர்தல் ஆண்டு என்றே சொல்லலாம்..
இடையூறு ஏற்படுத்த சீனா திட்டம்?: இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட உலகின் மிக முக்கியமான நாடுகளில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில் இடையூறு ஏற்படுத்த சீனா திட்டமிட்டுள்ளதாக பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது, ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் மூலமாக சமூக வலைத்தளங்களில் கன்டெண்ட்களை பதிவு செய்ய திட்டமிட்டுள்ளதாம்.
மைக்ரோசாப்ட் நிறுவன உளவு பிரிவு: இதன் மூலம், வாக்களிக்கும் மக்களின் மனநிலையை மாற்றி தங்களுக்கு சாதகமான முடிவுகள் வரும் விதமாக கண்டெண்ட்கள் வெளியிடப்படும் என்பதே அதன் எச்சரிக்கையாகும். இந்த எச்சரிக்கையை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உளவு பிரிவு வெளியிட்டுள்ளது. சீன அரசு ஆதரவு பெற்ற சைபர் குழுக்கள் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்களாம்.
இந்தியா மட்டும் இன்றி அமெரிக்கா, தென்கொரியா நாடுகளின் தேர்தலிலும் ஆதிக்கம் செலுத்தி முடிவுகளை தங்கள் நாட்டிற்கு சாதகமான வகையில் மாற்றலாம் என எதிர்பார்க்கப்படுவதாக மைக்ரோசாப்ட் வெளியிட்ட எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
போலியான ஆடியோ, மீம்ஸ்கள்: தைவான் தேர்தலின் போது, சீன அரசு ஆதரவு அமைப்பான Storm 1376, or Spamouflage ஆகியவை தீவிரமாக செயல்பட்டதாகவும், இந்தக் குழுக்கள், போலியாக ஆடியோ, ஏஐ மூலம் உருவாக்கப்படும் கன்டெண்ட்கள், மீம்ஸ்கள் ஆகியவற்றை போட்டு சில குறிப்பிட்ட வேட்பாளர்களுக்கு எதிராக பரப்பியதாகவும் மைக்ரோசாப்ட் கூறியுள்ளது. இதன் மூலம் வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மறைமுகமாக சீனா முடிவு செய்யும் விதமாக செயல்பட்டது என்பதே இதன் அர்த்தமாகும்.
-
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
100% எத்தனால் எரிபொருள்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு! பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்! -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications