பதவியேற்பு விழா.. போலி மீசை, மப்ளர், கண்ணாடியுடன் "அரவிந்த் கெஜ்ரிவால்" பங்கேற்பு
Recommended Video
டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் இந்த குட்டி பையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின் முடிவுகள் கடந்த 11-ஆம் தேதி வெளியானது. எக்சிட் போல் முடிவுகளை வைத்து ஆம் ஆத்மியே வெற்றி பெறும் என்பதால் கடந்த 10-ஆம் தேதியே ஆம் ஆத்மியின் கட்சி அலுவலகத்திற்கு தொண்டர்கள் வருகை தந்தனர்.
அவ்வாறு வருகை தந்ததில் ஒரு சிறுவன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தான்.

8 இடங்களில்
ஆம் அவன் ஆம் ஆத்மி தொண்டரின் மகன். அப்படியே அரவிந்த் கெஜ்ரிவாலை உரித்து வைத்தது போல் வேடமிட்டு வந்திருந்தான். வெற்றியை கொண்டாட ரோஜா மலர்களால் பூக்கோலம் போட்டான். இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்றது. அது போல் பாஜக வெறும் 8 இடங்களில் மட்டுமே வெற்றியை பெற்றது.

அழைப்பு
இந்த நிலையில் 3ஆவது முறையாக டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான பதவியேற்பு விழா இன்று ராம்லீலா மைதானத்தில் நடைபெற்றது. இதற்காக மைதானத்தை சுற்றி சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த விழாவிற்கு அரசியல்வாதிகள், மற்ற மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

வாரணாசி
மாறாக மக்கள் முன்பு பதவியேற்கவே கெஜ்ரிவால் விரும்பினார். டெல்லியில் உள்ள அரசு பணியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அது போல் பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி தொகுதியின் 9 எம்பிக்கள், புதிதாக தேர்வு செய்யப்பட்ட 8 எம்எல்ஏக்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டன. இவர்களில் பிரதமர் மோடி வாரணாசி செல்லவுள்ளதால் அவர் விழாவில் பங்கேற்கவில்லை.
|
சோட்டா விஐபி
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக மினி மப்ளர்மேனுக்கு ஆம் ஆத்மி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒரு வயது சிறுவனான ஆவ்யான் தோமர் கெஜ்ரிவாலை போல் போலி மீசை, கண்ணாடி, மப்ளர், குல்லா ஆகியவற்றை அணிந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இவரது தந்தை தொழிலதிபர் ராகுல் தோமர், தாய் மிகாஷி. இருவரும் ஆம் ஆத்மி ஆதரவாளர்கள். அரசியல்வாதிகள், மற்ற மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில் இந்த குட்டி விஐபி மட்டும் இந்த நிகழ்ச்சியல் பங்கேற்றான்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications