இளையராஜா என்ன குற்றம் செய்தார்?.. அறிவாலயத்திற்கு பிடிக்காவிட்டால் எதையும் கூறக் கூடாதா? எல் முருகன்
டெல்லி: இளையராஜா அப்படி என்ன குற்றம் செய்துவிட்டார் என மத்திய இணையமைச்சர் எல் முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சட்ட மாமேதை அம்பேத்கர் ஆகிய இருவரையும் ஒப்பிட்டு அம்பேத்கர் அன்ட் மோதி என்ற தலைப்பில் புளூகிராஃப்ட் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார்.
அதில் அவர் எழுதியிருக்கையில் பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது.

உள்கட்டமைப்புகள்
இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது, சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார்.

மோடியின் கனவு
அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள் என குறிப்பிட்டுள்ளார். அம்பேத்கரை எப்படி மோடியுடன் ஒப்பிடலாம் என பலதரப்பினர் கண்டனங்களை எழுப்பி வருகிறார்கள். சினிமா துறையினரே பலர் இளையராஜாவுக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

என்ன குற்றம்
இந்த நிலையில் மத்திய அமைச்சர் எல் முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் இளையராஜா என்ன குற்றம் செய்தார்? திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு பிடிக்காத ஒரு கருத்தை இளையராஜா சொன்னது ஒரு குற்றமா?
Recommended Video

எதிர்ப்பு
கருத்து சுதந்திரம் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது. ஆனால் அத்தகைய கருத்து சுதந்திரம் எதற்காக இளையராஜாவுக்கு மறுக்கப்படுகிறது. திமுக தலித் சமூகத்தினருக்கு எதிராகவும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான மனநிலையில் உள்ளதையே அவர்களது எதிர்ப்பு காட்டுகிறது என எல் முருகன் கூறியுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications