லடாக் மோதல்.. அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை லோக்சபாவில் உரை.. முக்கிய அறிவிப்பு?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லடாக் மோதல் குறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை லோக்சபாவில் உரையாற்ற உள்ளார். நாளை மதியம் 3 மணிக்கு ராஜ்நாத் சிங் லடாக் குறித்து உரையாற்ற உள்ளார்.

இந்தியா சீனா இடையே கடந்த மே மாதத்தில் இருந்து லடாக்கில் மோதல் நிலவி வருகிறது. ஆனால் எல்லையில் இன்னும் முழுமையாக பதற்றம் தணியவில்லை. இந்த உரசலை முடிவிற்கு கொண்டு வரும் வகையில் இதுவரை கிட்டத்தட்ட 30 முறை பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளது.

Minister Rajnath Singh may talk about Ladakh issue in Parliament tomorrow

ஆனால் எந்த பேச்சுவார்த்தையில் முழுமையான தீர்வு காணப்படவில்லை. எல்லையில் அமைதியை கொண்டு வரும் வகையில் முழுமையான முடிவு எதிலும் எடுக்கப்படவில்லை. இதனால் எல்லையில் இரண்டு நாட்டு படைகளும் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் சீனா நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் இ உடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நடத்திய பேச்சுவார்த்தையும் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. இதனால் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் லடாக் மோதல் குறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை லோக்சபாவில் உரையாற்ற உள்ளார். லடாக்கில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து இவர் அறிவிக்க வாய்ப்புள்ளது. லடாக் குறித்து முக்கிய அறிவிப்பை ராஜ்நாத் சிங் வெளியிடலாம், இது தொடர்பாக நாளை நாடாளுமன்றத்தில் தனது உரையோடு சேர்த்து ராஜ்நாத் சிங் அறிக்கை வெளியிட வாய்ப்புள்ளது.

ஆனால் இது தொடர்பாக லோக்சபாவில் விவாதம் நடக்க வாய்ப்பு இல்லை என்கிறார்கள். மாறாக அறிக்கை ஒன்றை மட்டும் ராஜ்நாத் சிங் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+