அந்தாண்ட அமித்ஷா.. இந்தாண்ட ராஜ்நாத் சிங்.. நடுவுல பிரதமர் மோடி.. நல்லா கேப் விட்டு உட்காருங்க!
டெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் இன்று காலை நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்கள் சமூக விலகலை பின்பற்றும் நோக்கில் இடைவெளிவிட்டு அமர்ந்திருந்தனர்.
கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 562 ஆக உயர்ந்துவிட்டது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துவிட்டது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் இந்தியா முழுவதும் லாக் டவுன் நிலை அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் இன்று காலை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் அமைச்சர்களின் இருக்கைகள் அருகருகே இல்லாமல் இடைவெளிவிட்டு போடப்பட்டிருந்தது. நடுவில் மோடி உட்கார்ந்திருந்தார். அவருக்கு வலது பக்கம் அமித்ஷாவும், இடது பக்கம் ராஜ்நாத் சிங்கும் அமர்ந்திருந்தனர்.
பின்னர் சுற்றி மற்ற அமைச்சர்களுக்கு இருக்கைகள் போடப்பட்டிருந்தன. இதன் மூலம் சமூக விலகல் குறித்து விழிப்புணர்வை மத்திய அரசு ஏற்படுத்துவதாக பார்க்கப்படுகிறது. நேற்று நாட்டு மக்களிடம் மோடி உரையாற்றினார்.
அப்போது அவர் கொரோனா வைரஸ் கடுமையாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் இதன் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா காட்டுத் தீ போல் பரவி வருகிறது. எனவே கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சமூக விலகலை பின்பற்றுவதை தவிர வேறு வழியில்லை என தெரிவித்தார்.
சமூக விலகலுக்காகவும் சமூக பரவலை தடுக்கவும்தான் 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் லாக் டவுன் செய்யப்பட்டுள்ளது. எனவே சமூக விலகலை பின்பற்றுவோம்! சமூக பரவலைத் தடுப்போம்!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications