‘சிறப்பு ரயில்கள்' கேட்கும் மாநிலங்கள்.. ரயில்களை இயக்க திட்டத்தை தயார் செய்யும் ரயில்வே!
டெல்லி: பேருந்துகள் மூலம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு செல்ல மத்திய அரசு அனுமதித்துள்ளது. எனினும், பல மாநிலங்கள் சிறப்பு ரயில்களைக் கோரியுள்ளன. அதற்கு வெளிமாநிலங்களில் அதிக அளவில் சிக்கித் தவித்து வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
இதையடுத்து, ஒரு நாளைக்கு 400 சிறப்பு ரயில்களை இயக்கும் திட்டத்தையும் ரயில்வே அமைச்சகம் உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது விரிவான நெறிமுறையுடன். 1,000 என்ற அளவுக்கு கூட இருக்கும் என்கிறார்கள்.

மே 3 ஆம் தேதிக்கு முன்னர் பயணிகள் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றாலும், ரயில்வே இந்த திட்டத்தை அரசாங்கத்தின் உயர் மட்டங்களில் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் நேற்று வெளியிட்ட டுவிட் பதிவில், "புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அனுப்புவதற்காக நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட கோரிக்கை இறுதியாக அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது ஒரு வரவேற்கத்தக்க முன்னேற்றம ஆகும். ஆனால் இந்திய ரயில்வே இயக்கத்தை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்புவதை ரயில் போக்குவரத்து இல்லாமல் எளிதாக்க முடியாது. ஓரிரு நாட்களில், தமிழகம், கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், அசாம் மற்றும் வடகிழக்கு உள்ளிட்ட நாடு முழுவதும் இருந்து 6 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை ராஜஸ்தான் அரசுக்கு கிடைத்துள்ளது. அவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப ரயில்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதேபோல் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் தனது மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை திரும்ப அழைத்து வர மாநிலத்திற்கு சிறப்பு ரயில்கள் தேவை என்று கூறியதாக தெரிவித்தார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுக்கு பியூஸ் கோயலிடம் நன்றி தெரிவித்ததாகவும் தெரிவித்தார். அனைத்து மக்களையும் அழைத்து வர ரயில் சேவை அவசியம் என்றார்.











Click it and Unblock the Notifications