அகமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்த நபர்.. தப்பித்தது இப்படித்தான்! வெளியான புதிய வீடியோ!
அகமதாபாத்: கடந்த 12ம் தேதி ஏஐ-171 எனும் ஏர் இந்தியா விமானம் , குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து புறப்பட்ட சில வினாடிகளிலேயே விபத்தில் சிக்கியது. இதில் விஸ்வாஷ் குமார் ரமேஷ் என்கிற ஒரேயொரு பயணி மட்டுமே உயிர் பிழைத்துள்ளார். அவர் எப்படி விபத்திலிருந்து தப்பினார் என்பது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
அகமதாபாத்தில் உள்ள பி.ஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தில் விமானம் மோதிய பிறகு, தீப்பற்றி எரிந்திருக்கிறது. அக்கம் பக்கத்தில் இருந்த மக்கள் இதனை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது ஒரேயொரு நபர் மட்டும், விடுதியின் மெயின் கேட் வழியாக செல்போனை கையில் எடுத்துக்கொண்டு வந்தார். பின்னர்தான் தெரிந்தது, விபத்தில் உயிர் பிழைத்தது இவர் மட்டும்தான் என்று. இவரை உடனடியாக மக்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இவர் மெயின் கேட்டிலிருந்து நடந்து வந்த வீடியோதான் தற்போது இணையத்தில் பரவலாக ஷேராகி வருகிறது. வீடியோவில், அவர் வெள்ளை நிற டி-ஷர்ட் அணிந்து, இடது கையில் மொபைல் போனுடன் விபத்து நடந்த இடத்தில் இருந்து வெளியே வருகிறார்.
விமானத்தில் 11A எண் இருக்கையில் இவர் அமர்ந்திருந்தார். இந்த இருக்கை விமானத்தின் அவசரக்கால கதவுக்கு பக்கத்தில் இருக்கிறது. தான் உயிர் பிழைத்தது குறித்து கூறிய அவர், "நான் உயிருடன்தான் இருக்கிறேன் என்பதை இன்னும் நம்பவில்லை. எப்படி உயிர் பிழைத்தேன் என்று தனக்குத் தெரியவில்லை. கொஞ்ச நேரத்தில் நான் செத்துப்போய்விடுவேன் என்று நினைத்தேன். ஆனால், கண் திறந்து பார்த்தபோது, உயிருடன் இருந்தேன். உடனே எனது சீட் பெல்ட்டை கழற்றி வெளியே வந்தேன். எனது கண் முன்னாலேயே விமானப் பணிப்பெண் மற்றும் எனது அங்கிள், ஆன்ட்டி எல்லோரும் இறந்துவிட்டார்கள்.
விமானத்திலிருந்து நான் வெளியே வந்தபோது தரையில் இருப்பதை உணர்ந்தேன் இருந்தேன். கட்டிடத்தின் சுவர் எனக்கு எதிர் பக்கமாக இருந்ததால், எல்லோரும் உள்ளேயே சிக்கிக்கொண்டனர். விமானம் புறப்பட்ட ஒரு நிமிடத்திற்குப் பிறகு, அது சிக்கலில் இருப்பதை போல் உணர்ந்தேன். பின்னர் பச்சை மற்றும் வெள்ளை விளக்குகள் எரிந்தன. விமானத்தை மேலே உயர்த்த விமானிகள் போராடிக்கொண்டிருந்தார்கள். என்ன நடக்கிறது என்பதை புரிந்துக்கொள்வதற்குள், விபத்து நடந்தவிட்டது" என்று கூறியுள்ளார்.
இந்த விபத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உட்பட, 241 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு அந்தந்த குடும்பத்தினரிடம் ஒப்படைக்க டிஎன்ஏ பரிசோதனை நடந்து வருகிறது. இந்த விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபர் விஸ்வாஷ் குமார் ரமேஷ் தான்.
અવિશ્વસનીય પરંતુ સત્ય!
— Sagar Patoliya (@kathiyawadiii) June 16, 2025
અમદાવાદ પ્લેન ક્રેશમાં ચમત્કારિક રીતે બચેલા રમેશ વિશ્વાસનો વધુ એક વિડિઓ સામે આવ્યો.
દુર્ઘટના થયા પછી હાથમાં ફોન સાથે ચાલીને બહાર નીકળ્યો રમેશ વિશ્વાસ. #AhmedabadPlaneCrash pic.twitter.com/94WDepkKjn
விபத்து குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. விமானம் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட 32 வினாடிகளில் விபத்துக்குள்ளானது. இது எப்படி நடந்தது? மனித தவறு காரணமா? இயந்திர கோளாறா? பறவை மோதலா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications