பிரதமரின் பேச்சை தவறாக திசை திருப்புகிறார்கள்.. மோதலுக்கு பின் சீனா அத்துமீறவில்லை- வெளியான விளக்கம்
டெல்லி: அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது குறித்து திரித்து, அரசியல் செய்யப்படுவதாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.
லடாக் எல்லைப் பிரச்சினை தொடர்பாக நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தின்போது, இந்தியாவில் ஒரு இன்ச் நிலப்பகுதியை கூட சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.
Recommended Video
இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சீனா ஆக்கிரமிக்கா விட்டால் எதற்காக மோதல் நடைபெற்றது என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

தவறான புரிதல்
பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும், இவ்வாறு கேள்வி எழுப்பிய நிலையில், பிரதமர் அலுவலகம் ஒரு விளக்கம் இன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது: அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு பரப்பப்படுகிறது. பிரதமர் தனது உரையின்போது இந்திய எல்லைக்குள் ஊடுருவ நடக்கும் எந்த ஒரு முயற்சியும் முறியடிக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

பதிலடி
கடந்த காலங்களில் இழந்ததை போல அல்லாமல், இப்போது எல்லை தாண்டிய நடவடிக்கைகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் உறுதிபட கூறியுள்ளார். சீனா பெரும் படை எண்ணிக்கையில் எல்லைப் பகுதிக்கு வந்தது. இந்தியா அதற்கு தக்க பதிலடி கொடுத்தது. ஜூன் 15ஆம் தேதி கல்வான் பகுதியில் சில கட்டமைப்புகளை சீனா எழுப்பியதால் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலுக்கு பிறகுதான் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

மோதலுக்கு பிறகு ஆக்கிரமிப்பு இல்லை
இந்த மோதலுக்கு பிறகு, சீன ராணுவத்தால் இந்தியப் பகுதிகளை ஆக்கிரமிக்க முடியவில்லை. ஆக்கிரமிப்பு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. யாராவது எல்லை தாண்ட முற்பட்டால் அவர்களுக்கு இந்த மண்ணின் வீரமிக்க மகன்கள் தக்க பாடத்தை கற்பிப்பார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெளிவாக கூறியுள்ளார்.

தேவையற்ற சர்ச்சை
நமது வீரமிக்க ராணுவத்தினர் நமது எல்லையை பாதுகாப்பதற்காக போராடிக் கொண்டிருக்க கூடிய சூழ்நிலையில், தேவையற்ற சர்ச்சைகள் எழுப்பப்படுகிறது. இக்கட்டான இந்த சூழ்நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களின் ஒருமித்த ஆதரவை அரசுக்கு வழங்கும் என்று தெரிவித்துள்ளனர். இது போன்ற தூண்டுதல் பிரச்சாரங்களால் இந்திய மக்களின் ஒற்றுமை ஒருபோதும் பாதிக்கப்படாது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications