அமித்ஷாவின் ‘வந்தேறி’ விமர்சனம்.. கொந்தளிக்குது மிசோரம்- பாஜக கூட்டணி கட்சி எம்.பி குமுறல்!
டெல்லி: மணிப்பூர் வன்முறைக்கு மியான்மரில் இருந்து வந்தேறிய குக்கி இனமக்களே காரணம் என மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்த கருத்து இப்போது மணிப்பூரில் மட்டுமல்ல மிசோரமிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மணிப்பூரின் குக்கி பழங்குடிகள், மிசோரம் மாநிலத்தின் பெரும்பான்மை மிசோ மக்களுடன் தொப்புள் கொடி உறவுள்ளவர்கள். இதனால் இயல்பாகவே குக்கி இனமக்கள் படுகொலை செய்யப்படுகிற போது மிசோரம் மாநில அரசு கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறது.

அத்துடன் மிசோரம் மாநிலத்தில் இருந்து மைத்தேயி மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என பிரிவினைவாத அமைப்புகள் கெடுவிதித்தன. இதனால் மைத்தேயி மக்கள் கணிசமானோர் மிசோரமை விட்டுவெளியேறி அஸ்ஸாமில் தஞ்சமடைந்தனர். இதனையடுத்து அஸ்ஸாமில் இருந்து மிசோ மக்கள் வெளியேற அம்மாநில மாணவர் அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. குக்கி இனமக்களுடன் மிசோரம் மாநிலம் ஆதரவாக இருப்பதால் வடகிழக்கு மாநிலங்களில் பதற்றம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் லோக்சபாவில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது புதன்கிழமையன்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மியான்மர் நாட்டில் இருந்து ஊடுருவிய குக்கி இனமக்கள்தான் வன்முறைக்கு காரணம் என விமர்சித்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது தொடர்பாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மிசோ தேசிய முன்னணியின் ஒரே ஒரு ராஜ்யசபா எம்பி வன்லால்வேனா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராஜ்யசபாவில், நான் மிசோரமில் இருந்து வந்துள்ள பழங்குடி வகுப்பை சேர்ந்தவன். நாங்கள் அன்னிய நாட்டில் இருந்து இங்கு வந்து குடியேறியவர்கள் அல்ல. நாங்கள் மியான்மர் நாட்டு குடிமக்கள் அல்ல. நாங்கள் இந்தியர்கள்தான். நாடு விடுதலைக்கு முன்னரே வடகிழக்கு மாநிலங்களில் பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்து வரும் பழங்குடிகள் நாங்கள் என கடும் அமளிக்கு இடையே கூறியிருந்தார். ஆனால் அவரது மைக் துண்டிக்கப்பட்டு சபை குறிப்புகளில் இருந்து இந்த கருத்து நீக்கப்பட்டது. மேலும் மிசோரம் அமைப்புகளும் அமித்ஷாவின் வந்தேறி கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு வன்லால்வேனா எம்பி அளித்த பேட்டியில், ராஜ்யசபாவில் நான் பேசிய போது என்னுடைய மைக் துண்டிக்கப்ப்ட்டது. நான் பேசிய கருத்துகள் சபை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன என குற்றம்சாட்டினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications