டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உங்க மனுதான் ரொம்ப முக்கியம்.. காஷ்மீர் வழக்கில் திருப்பம்..அரசியல் சாசன அமர்விற்கு சென்றது எப்படி?

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரத்தை நீக்கியதற்கு எதிராக வழக்கறிஞர் எம்எல் சர்மா தொடுத்த வழக்கு மிக முக்கியமானது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    காஷ்மீரில் அதிரடி மாற்றங்கள் செய்ய தயார்.. இன்று மத்திய அரசு முக்கிய முடிவு?- வீடியோ

    டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரத்தை நீக்கியதற்கு எதிராக வழக்கறிஞர் எம்எல் சர்மா தொடுத்த வழக்கு மிக முக்கியமானது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன் காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து உள்ளது.

    இதற்கு எதிராக 14 பேர் வழக்கு தொடுத்து இருக்கிறார்கள். ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அதிகாரத்தை நீக்கியது தவறு, அங்கு இணையம் போன் தொலைத்தொடர்பு இணைப்பை துண்டித்தது தவறு என்று வழக்கு தொடுக்கப்பட்டது.

    எப்படி முக்கியம்

    எப்படி முக்கியம்

    இந்த வழக்கில் வழக்கறிஞர் எம். எல். சர்மா, ஷேலா ரஷித், ஷா பசல் ஆகியோர் காஷ்மீருக்கு சிறப்பு அங்கீகாரத்தை நீக்கியது தவறு என்று வழக்கு தொடுத்துள்ளனர். சிறப்பு அதிகாரத்தை நீக்க கடைப்பிடிக்கப்பட்ட முறை தவறானது. அதை ஏற்க கூடாது. இந்த சிறப்பு அதிகார நீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    என்ன விசாரணை

    என்ன விசாரணை

    தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்ஏ நசீர் மற்றும் எஸ்ஏ போட்பே ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. கடந்த அமர்வின் போதே இந்த வழக்கில் எம்எல் சர்மாவிடம் சரமாரியான கேள்விகளை உச்ச நீதிமன்றம் எழுப்பியது. இவர் தாக்கல் செய்த மனு முழுமையாக இல்லை என்று கூறி உச்ச நீதிமன்றம் அவரை விமர்சித்தது.

    என்ன கேட்டார்

    என்ன கேட்டார்

    சென்ற அமர்வில் எம்எல் சர்மாவிடம் தலைமை நீதிபதி சரமாரி கேள்விகளை எழுப்பினார். அதில், உங்களுக்கு என்ன வேண்டும்? உங்கள் கோரிக்கை என்ன?. உங்கள் வழக்கின் நோக்கம் என்ன?. காஷ்மீரில் அரசு என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறீர்கள். காஷ்மீர் 370 சட்ட நீக்கத்தால் நிவாரணம் வேண்டுமா?.

    இல்லை

    இல்லை

    அரை மணி நேரம் உங்கள் மனுவை படித்தும் கூட புரியவில்லை. நீங்கள் மனுவை தவறாக எழுதி இருக்கிறீர்கள். உங்கள் மனுவில் உள்ள அனைத்து பிழைகளையும் சரி செய்து மீண்டும் தாக்கல் செய்க என்று வழக்கறிஞர் எம்எல் சர்மா மனுவிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    மாற்றி தாக்கல்

    மாற்றி தாக்கல்

    இதையடுத்து எம்எல் சர்மா தனது மனுவை சரி செய்து பின் போன வாரம் மீண்டும் தாக்கல் செய்தார். அவரை தொடர்ந்து ஷேலா ரஷித், ஷா பசல் ஆகியோர் காஷ்மீருக்கு சிறப்பு அங்கீகாரத்தை நீக்கியது தவறு என்று வழக்கு தொடுத்தனர். இதைதான் இன்று நீதிபதிகள் விசாரித்தனர்.

    சூப்பர்

    சூப்பர்

    எம்எல் சர்மா மனுவை பார்த்த நீதிபதிகள், உங்கள் மனு சரியாக இருக்கிறது. நீங்கள் கேட்டு இருக்கும் கேள்விகள் மிக முக்கியமானது. இதற்கான விளக்கத்தை பெற வேண்டிய அவசியம் உள்ளது. உங்கள் வழக்கை உடனடியாக அரசியல் சாசன அமர்விற்கு மாற்றுகிறோம் என்றும் கூறினார்கள்.

    காரணம்

    காரணம்

    அதன்படி இந்த காஷ்மீர் பிரச்சனையில் 370 சட்டப்பிரிவு நீக்கத்திற்கு எதிராக தொடுக்கப்பட்டு இருக்கும் அனைத்து வழக்குகளையும் அரசியல் சாசன அமர்விற்கு மாற்றுவதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உட்பட 5 நீதிபதிகள் கொண்டு அமர்விற்கு வழக்கு மாற்றப்படுகிறது. வரும் அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து வழக்கு மீதான விசாரணை தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    This How ML Sharma case played the main role in changing the Kashmir case to the Constitutional bench.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X