டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரஜினியை அழைத்த கையோடு.. மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க கமலுக்கும் அழைப்பு!

Google Oneindia Tamil News

Recommended Video

    Modi Oath: மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க ரஜினி, கமலுக்கு அழைப்பு!- வீடியோ

    டெல்லி: டெல்லியில் மே 30ம் தேதி நடைபெறும் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    மக்களவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து நரேந்திர மோடி இரண்டாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்கவுள்ளார். மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க கூட்டணிக்கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் இலங்கை அதிபர் சிறிசேனா உள்ளிட்ட அண்டை நாட்டு தலைவர்களுக்கும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள ரஜினிகாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

    கமலுக்கு அழைப்பு

    கமலுக்கு அழைப்பு

    பதவியேற்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    முடிவு செய்யவில்லை

    முடிவு செய்யவில்லை

    ஆனால் பதவியேற்பு விழாவில் பங்கேற்பது குறித்து கமல் இன்னும் முடிவு செய்யவில்லை என கூறப்படுகிறது. நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய பிறகு பாஜகவை கடுமையாக சாடி வருகிறார்.

    சர்ச்சை பேச்சு

    சர்ச்சை பேச்சு

    அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பரப்புரையில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே என கூறினார் கமல். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    பாஜக விமர்சனம்

    பாஜக விமர்சனம்

    அதற்கு ஒரு இந்து தீவிரவாதியாக இருக்க முடியாது தீவிவாதியாக இருந்தால் அவர் இந்துவாக இருக்க முடியாது என மோடி பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக பாஜக நிர்வாகிகளும் தொடர்ந்து கமலை விமர்சித்து வருகின்றன.

    English summary
    MNM leader Kamalhaasan called for Modi's oath ceremony.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X