Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சிம்லா ஸ்பெஷல்".. மோடி 2.0.. இன்றுடன் 3ம் ஆண்டு நிறைவு.. சிம்லாவில் பாஜக மாநாடு.. பிரதமர் பங்கேற்பு

சிம்லாவில் பாஜகவின் சிறப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசின் 9 அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள 16 திட்டங்களின் மூலம் பயனடைந்த பொதுமக்களுடன், சிம்லாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடுகிறார்.

Recommended Video

    PM Modi Shimla Visit | 8 வருடத்தில் என்னை நான் பிரதமராக நினைத்ததே இல்லை! #Politics

    காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி மத்தியில் தொடர்ந்து வந்த நிலையில், பாஜகவின் சார்பில் போட்டியிட்டு மோடி பிரதமரானார்.. தற்போது மோடி 2வது முறையாகவும் பிரதமராக பொறுப்பில் உள்ளார்..

    முதலில், 2019ல் நடந்த தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி, 353 இடங்களை கைப்பற்றியது... பாஜக மட்டும் அப்போது 303 இடங்களை வென்று மாஸ் காட்டியது..

     3வது ஆண்டு காலம்

    3வது ஆண்டு காலம்

    அப்போது முதல் முறையாக பிரதமர் மோடி பதவியேற்றார்.. இதன்பிறகு, 2019-ல் நடந்த தேர்தலில் மறுபடியும் மோடி, இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றார்.. இந்த 2வது ஆண்டு ஆட்சிக்காலத்தின் 3வது ஆண்டு இன்றுடன் நிறைவு பெறுகிறது.. 4-ம் ஆண்டில் மோடியின் ஆட்சி காலடி வைக்கிறது.. இந்நிலையில், இதை பாஜக சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளது. அதன்படி, சிம்லாவில் பாஜகவின் சிறப்பு மாநாடு நடக்கிறது..

     பிரச்சாரம்

    பிரச்சாரம்

    இந்த விழாவின் மூலம், இன்று முதல் அடுத்த 15 நாட்களுக்கு மக்கள் தொடர்பு பிரச்சாரத்தை பாஜக முன்னெடுத்துள்ளது... மொத்தமாக, இந்த 8 வருடங்கள் ஆட்சி நிறைவடைந்துள்ள நிலையில், மோடி அரசின் செயல்பாடுகளை சாமானிய மக்களிடம் கொண்டு செல்லும் வகையில், சிம்லாவில் உள்ள ரிட்ஜ் மைதானத்தில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, அங்கு நடக்கும் பேரணியில் பங்கேற்கிறார்... இந்த விழாவை சிம்லாவில் நடத்த இன்னொரு காரணமும் உள்ளது..

     சிம்லா பேரணி

    சிம்லா பேரணி

    இந்த வருட இறுதியில் சட்டமன்றத் தேர்தல் இங்கு நடைபெற உள்ளது.. இதுகுறித்து இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் சொல்லும்போது, "பாஜக தலைமையிலான மத்திய அரசு பதவியேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி சிம்லாவில் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது... பிரதமர் மோடியும் இந்த பேரணியில் பங்கேற்கிறார். பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் ஒன்றிய அரசின் அமைச்சர்களும் விழாவில் காணொலி மூலம் பங்கேற்பார்கள்" என்றார்.

     இலவச சமையல் எரிவாயு

    இலவச சமையல் எரிவாயு

    அதேபோல, பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு நிதி திட்டம், பிரதமரின் இலவச சமையல் எரிவாயு திட்டம், ஊட்டச்சத்து இயக்கம், பிரதமரின் மகப்பேறு உதவித்திட்டம், தூய்மை இந்தியா இயக்கம் உள்ளிட்ட திட்டங்களின் தாக்கம் குறித்து, பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாட உள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் வழங்கி வரும் நிவாரண உதவித் திட்டத்தின் கீழ் 11-வது தவணையாக ரூ.21,000 கோடி தொகையை பிரதமர் விடுவிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+