ஜனாதிபதிக்கே மரியாதை இல்லையா? மம்தாவை குறிவைத்த மோடி - அமித் ஷா! திரிணாமுல் கொடுத்த விளக்கம்!
கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மற்றும் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி இடையே கருத்து மோதல் உருவாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு வங்காளத்தில் நடைபெற்ற பழங்குடியினர் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் தெரிவித்த கருத்துகள் அரசியல் விவாதமாக மாறியுள்ள நிலையில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மம்தாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதுதொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.
இன்று வடக்கு வங்காளத்தில் சாந்தால் பழங்குடியினருக்காக நடைபெற்ற சர்வதேச சாந்தால் மாநாட்டில் தலைமை விருந்தினராக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் பேசும்போது, தன்னுடைய பயணத்தின் போது மாநில அரசின் பிரதிநிதிகள் வரவேற்க வராததை பற்றி கேள்வி எழுப்பினார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், "நான் வடக்கு வங்காளம் வந்தபோது முதலமைச்சர் அல்லது அமைச்சரவையில் இருந்து யாரும் என்னை வரவேற்க வரவில்லை. அதனால் மம்தா பானர்ஜி என்னிடம் கோபமாக உள்ளாரா என்று தெரியவில்லை" என்று கூறினார்.

மேலும், தானும் வங்காளத்தின் மகளாகவே கருதப்படுகிறேன் என்றும், மம்தா பானர்ஜி தன்னுடைய தங்கை போன்றவர் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், சாந்தால் மாநாடு நடைபெற இருந்த இடம் மாற்றப்பட்டதையும் அவர் கேள்வி எழுப்பினார். முதலில் இந்த நிகழ்ச்சி பித்நகர் பகுதியில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்ததாகவும், பின்னர் அது கோஷிபூர் என்ற இடத்திற்கு மாற்றப்பட்டதாகவும் கூறினார். அந்த மாற்றத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து தமக்குத் தெரியவில்லை என்றும், அங்கு மக்கள் வருகை குறைவாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதே நேரத்தில், கடந்த பத்து ஆண்டுகளில் மத்திய அரசு பழங்குடியினரின் முன்னேற்றத்திற்காக பல நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் குடியரசுத் தலைவர் தெரிவித்தார். ஆனால் வடக்கு வங்காளத்தில் சாந்தால் மற்றும் பிற பழங்குடியினர் வளர்ச்சி அடைந்துள்ளனரா என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார். "இந்த பகுதியில் சாந்தால் மற்றும் பழங்குடியினர் வளர்ச்சி அடைந்துள்ளனரா? மத்திய அரசின் திட்டங்கள் உங்களிடம் வந்து சேருகின்றனவா? எனக்கு அதுபோல தோன்றவில்லை. சிலர் இந்த நிகழ்ச்சிக்கு வருவதைத் தடுக்க முயற்சி செய்கிறார்கள் போல தெரிகிறது. சிலருக்கு சாந்தால் மக்கள் ஒன்றுபடவும், முன்னேறவும், கல்வி பெறவும் விருப்பம் இல்லாமல் இருக்கலாம்" என்று அவர் கூறினார்.
குடியரசுத் தலைவரின் இந்த கருத்துகளைத் தொடர்ந்து அரசியல் பரபரப்பு அதிகரித்தது. இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டார். அவர் வெளியிட்ட பதிவில், சாந்தால் கலாச்சாரத்தை மதிக்காமல் நடத்தி குடியரசுத் தலைவரை அவமதித்துள்ளதாக மேற்கு வங்காள அரசை குற்றம் சாட்டினார். "இது மிகவும் வருத்தமான மற்றும் வெட்கக்கேடான சம்பவம். ஜனநாயகத்தையும் பழங்குடியினர் முன்னேற்றத்தையும் நம்புகிற அனைவருக்கும் இது மனவேதனை அளிக்கிறது. பழங்குடியினத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் தெரிவித்த வேதனை இந்திய மக்களிடம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று அவர் குறிப்பிட்டார்.
இதே கருத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தெரிவித்தார். குடியரசுத் தலைவரை மரியாதையின்றி நடத்துவது நடைமுறைக்கு முரணானது என்றும் அவர் விமர்சனம் செய்தார். இந்நிலையில், இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி, குடியரசுத் தலைவர் கூறிய கருத்துகள் அரசியல் நோக்கத்துடன் உள்ளதாக கூறினார். "குடியரசுத் தலைவர் பதவிக்கு ஏற்ற வகையில் பேச வேண்டும் என்று நான் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் இன்று ஒரு சமூகத்தைப் பற்றி மட்டும் பேசினீர்கள். வங்காளத்தில் உள்ள மற்ற சமூகங்களைப் பற்றி பேசவில்லை. தேர்தலுக்கு முன்பாக அரசியல் செய்ய வேண்டாம்" என்று அவர் கூறினார்.
மேலும், தேர்தல் காலத்தில் குடியரசுத் தலைவர் அடிக்கடி மாநிலத்திற்கு வருவது குறித்து அவர் கேள்வி எழுப்பினார். "ஒரு வருடத்திற்கு ஒருமுறை வந்தால் நான் வரவேற்க முடியும். ஆனால் தேர்தல் நேரத்தில் மீண்டும் மீண்டும் வரும்போது எல்லா நிகழ்ச்சிகளிலும் நான் பங்கேற்பது சாத்தியமில்லை" என்றும் அவர் தெரிவித்தார். இதற்கிடையே, பழங்குடியினர் நலனுக்காக மாநில அரசு மேற்கொண்ட பல திட்டங்களை தி8ரெஉகட்சி விளக்கமாக வெளியிட்டது. பெண்களுக்கான Lakshmir Bhandar Scheme திட்டத்தின் கீழ் பழங்குடியினர் பெண்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவி ரூ.500 அதிகரிக்கப்பட்டு ரூ.1,700 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக கட்சி தெரிவித்துள்ளது.
அதேபோல் பழங்குடியினர் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகைகள், அவர்களுக்கான பள்ளிகள், மற்றும் பழங்குடியினர் பகுதிகளுக்கான வளர்ச்சி திட்டங்கள் ஆகியவை மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் கட்சி கூறியுள்ளது. இந்த திட்டங்கள் அனைத்தும் பழங்குடியினர் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்றும், மாநிலத்தில் எந்த வளர்ச்சியும் நடைபெறவில்லை என்ற கருத்து தவறான தகவலின் அடிப்படையில் கூறப்பட்டதாகவும் திரிணாமூல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி












Click it and Unblock the Notifications