நீங்க 4G கட்சி... அமித்ஷாவின் ’அக்கப்போர்’ விளக்கம்! பாஜகதான் 2G கட்சி பொளேர் பதிலடி தந்த காங்கிரஸ்!
டெல்லி: காங்கிரஸ் கட்சியை 4G கட்சி என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சித்திருந்ததற்கு காங்கிரஸ் பதிலடி தந்துள்ளது. பாஜகதான் 2G கட்சி என காங்கிரஸ் சாடியுள்ளது.
தெலுங்கானா சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் இறுதி அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. தெலுங்கானா தேர்தலில் ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக என மும்முனைப் போட்டி நிலவுகிறது. ஆளும் பிஆர்எஸ் கட்சி 115 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை களமிறக்கியும் விட்டது.

இந்நிலையில் தெலுங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் நேற்று தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். இக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா, காங்கிரஸ் மற்றும் ஆளும் பிஆர்எஸ் கட்சிகளை கடுமையாக விமர்சித்தார்.
மேலும் காங்கிரஸ் கட்சி 4G கட்சி. அதாவது 4 தலைமுறை கட்சி. ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, ராகுல் காந்தி என 4 ஜெனரேசன் கட்சி. தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் கட்சி கேசிஆர், கேடிஆர் எனும் 2G கட்சி. தெலுங்கானா தேர்தலில் 4G கட்சியோ, 2G கட்சியோ வெல்லப் போவது கிடையாது. தெலுங்கானாவில் பாஜகதான் ஆட்சி அமைக்கும். பிஆர்எஸ் கட்சியின் சின்னம் கார். அந்த கார் பத்ராசலத்தைத் தாண்டி போக முடியாது. ஏனெனில் கார், ஓவைசியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என கடுமையாக சாடியிருந்தார் அமித்ஷா.

இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா அளித்த பதில்: பாஜகதான் 2G கட்சியாக செயல்படுகிறது. மோடி, அமித்ஷாதான் பாஜகவில் அனைத்து முடிவுகளையும் எடுக்கின்றனர். ஜேபி நட்டா, பாஜக தலைவர்தான். ஆனால் அவர் எந்த ஒரு முடிவையும் எடுப்பது இல்லை. அமைச்சரவை பணிகளைப் பார்க்காமல் தெலுங்கானா தேர்தல் பிரசாரம் செய்கிறார் அமித்ஷா. இவ்வாறு பவன் கேரா பதிலளித்தார்.
-
விஜயதரணியின் அடுத்த "ஜம்ப்".. விளவங்கோடு டூ தவெக மாஸ்டர் ஸ்கெட்ச்! காங்கிரஸ் எப்படி ஹேண்டில் பண்ணும் -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
காங்கிரசுக்கு ராஜ்யசபா எம்பி சீட் காலி? மீனாட்சி நடராஜனின் மனு.. உச்ச நீதிமன்றம் நிராகரித்தது ஏன்? -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications