இனி சீனாவின் ஆட்டம் க்ளோஸ்.. எகிறி அடிக்க ஆரம்பிக்கும் இந்தியா.. ரெடியாகும் பிரம்மாண்ட பிளான்!
டெல்லி: ரேர் எர்த் மெடல்களின் தேவை நவீன காலத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் சீனாவின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும் சூழலில், உலக நாடுகள் சீனாவை நம்பியே இருக்க வேண்டி உள்ளது. இதற்கிடையே சீனாவின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் மத்திய அமைச்சரவை இப்போது ஒரு முக்கிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இப்போது உலகில் வளர்ந்து வரும் துறைகளான மின்சார வாகனங்கள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட நவீனத் தொழில்நுட்பங்களுக்கு ரேர் எர்த் மெடல்கள் முக்கிய தேவையாக இருக்கிறது. தற்போதைய சூழலில் ஒட்டுமொத்த உலகிற்குத் தேவையான ரேர் எர்த் மெடலும் சீனாவில் இருந்தே செல்கிறது. உலக வல்லரசான அமெரிக்கா கூட இதில் சீனாவையே நம்பி இருக்கிறது.

ரேர் எர்த் மெடல்
இதனால் சீனா திடீரென இதன் ஏற்றுமதிக்கு எதாவது கட்டுப்பாட்டை விதித்தால் அதன் பாதிப்பு உலகெங்கும் எதிரொலிப்பதாகவே இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் கூட இப்படி தான் சீனா திடீரென சில கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் உலகெங்கும் அதன் பாதிப்பு எதிரொலித்தது. இந்தியாவில் மின்சார வாகனங்கள் தங்கள் உற்பத்தியையே நிறுத்தும் சூழல் கூட ஏற்பட்டது. அதன் பிறகே நிலைமை மெல்லச் சீரானது.
இப்படி ஒரே நாட்டை நம்பி இருக்கக்கூடாது என்பதால் மத்திய அரசு இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தது. இதற்கிடையே இப்போது ரேர் எர்த் மெடல் உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சீனாவை நம்பி இருப்பதைத் தவிர்க்க இது கை கொடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு
இந்த திட்டத்திற்காக, மத்திய அரசு ₹7,280 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. ஆண்டுக்கு 6,000 மெட்ரிக் டன் ரேர் எர்த் மெடல்களை உற்பத்தி செய்யத் தேவையான உட்கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரேர் எர்த் மெடல்களை வெட்டி எடுப்பது முதல் அதை தொழில்துறைக்கு ஏற்ற வகையில் மாற்றுவது வரை எல்லாவற்றையும் இந்தியாவிலேயே மேற்கொள்ளும் வகையில் உட்கட்டமைப்பை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது..
இப்போது இந்தியாவின் ரேர் எர்த் மெடல் தேவை கிட்டத்தட்ட 100% இறக்குமதி தான் செய்யப்படுகிறது. அந்த நிலையை மாற்றுவதே இதன் நோக்கமாகும். 2030ஆம் ஆண்டுக்குள் ரேர் எர்த் மெடல் தேவை இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், உள்நாட்டு சப்ளையை உறுதிப்படுத்தவும் எதிர்காலத்தில் இக்கட்டான சூழல் ஏற்படுவதைத் தவிர்க்கவுமே மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
என்ன திட்டம்
தற்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள ரூ.7280 கோடியில் மூலதனச் செலவுகளுக்காக ரூ.6,450 கோடி ஒதுக்கப்படும். மேலும், ஆபரேஷன் செலவுகளுக்கு ரூ.800 கோடி வழங்கப்படும். அதாவது ரேர் எர்த் மெடல் சார்ந்த பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்களுக்கு இந்த ஊக்க தொகை வழங்கப்படும். சர்வதேச அளவில் ஏலம் நடத்தப்பட்டு, ஐந்து நிறுவனங்களுக்கு இந்த திட்டம் ஒதுக்கப்படும். ஒவ்வொரு நிறுவனத்திற்கும் அதிகபட்சமாக 1,200 மெட்ரிக் டன் வரை உற்பத்தி செய்ய அனுமதிக்கப்படும்.
மொத்தம் ஏழு ஆண்டுகள்
இந்த திட்டம் மொத்தம் ஏழு ஆண்டுகள் செயல்படுத்தப்படும். இதில் ஆலைகளை அமைப்பதற்கான இரண்டு ஆண்டுகளும், சலுகைகளை வழங்குவதற்கான ஐந்து ஆண்டுகளும் அடங்கும். ரேர் எர்த் மெடல்களை எடுக்க ஆகும் செலவுகளில் கணிசமான தொகையை அரசு மானியமாக வழங்கிவிடுவதால்.. இனி பல தனியார் நிறுவனங்கள் இதில் ஆர்வம் காட்ட ஆரம்பிக்கும் என்றே தெரிகிறது.
-
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications