புதினுக்கு பறந்த போன்.. தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து சொன்ன மோடி!உக்ரைன்-ரஷ்யா போர் குறித்தும் பேச்சு
டெல்லி: ரஷ்யாவில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் புதின் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, புதினை தொலைபேசியில் அழைத்து வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.
இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், “புதினுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்துக்களை பகிர்ந்துக்கொண்ட பிரதமர் மோடி, ரஷ்யாவின் நட்பு நாடுகளின் அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் ரஷ்யா-உக்ரைன் மோதல் குறித்து இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும் பேசியுள்ளார்” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உக்ரைன் போர் தொடர்பாக இந்தியா வெளிப்படையாக கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்த்து வந்தது. இருப்பினும், கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் புதின் உடனான சந்திப்பின் போது, “இன்றைய காலகட்டம் போருக்கானது அல்ல” என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். இதனையடுத்து இன்று போர் குறித்து பேசப்பட்டிருக்கிறது.
ரஷ்யாவில் 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும். கடந்த 1991ம் ஆண்டு சோவியத் ரஷ்யா, வெறும் ரஷ்யாவாக உடைந்தது. இதனையடுத்து முன்னாள் சோவியத் நாடுகள் அமெரிக்க சார்பு நிலையை எடுத்திருக்கின்றன. அதேபோல, நேட்டோவிலும் உறுப்பினராகியுள்ளன. இது தற்போதைய ரஷ்யாவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக உக்ரைனின் நிலைப்பாடு போரை தூண்டியிருக்கிறது.
இந்நிலையில், அதிபர் புதின் பதவிக்காலம் முடிய இருந்ததால் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தல் மூன்று நாட்கள் வரை நீடித்தது. ரஷ்ய வரலாற்றில் மூன்று நாட்கள் வரை தேர்தல் நீடித்ததே கிடையாது. இருப்பினும் இந்த தேர்தல் அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது. இதில், புதின் சுயேட்சையாக போட்டியிட்டார். இவருக்கு எதிராக ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய சுதந்திர ஜனநாயக கட்சி, புதிய மக்கள் கட்சி ஆகியவை போட்டியிட்டன.
ஆனால், 88 சதவிகித வாக்ககுளை பெற்று புதின் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதன் மூலம், ரஷ்ய வரலாற்றில் 200 ஆண்டுகளுக்குப் பின்னர் ஸ்டாலினுக்குப் பிறகு தொடர்ச்சியாக 3வது முறையாக அதிபர் தேர்தலில் வெற்றி என்ற சாதனையை புதின் படைத்துள்ளார். இந்நிலையில் இவரது வெற்றிக்கு பிரதமர் .மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அதேபோல உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடனும் மோடி பேசியிருக்கிறார். இது குறித்து அவர் x தளத்தில் பதிவிட்டிருந்ததாவது, “இந்தியா-உக்ரைன் இரு நாடுகளின் உறவை வலுப்படுத்துவது குறித்து ஜெலென்ஸ்கியுடன் கலந்துரையாடினேன். அமைதிக்கான அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியாவின் நிலையான ஆதரவை தெரிவித்தேன். அதேபோல நடந்துகொண்டிருக்கும் மோதலை முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டுவருவது குறித்தும் பேசினேன். உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளை இந்தியா தொடர்ந்து வழங்கும்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக சீனா உள்ளிட்ட நாடுகள் புதின் வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தன. ஆனாலும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் புதினை சர்வாதிகாரியாக காட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
தொடரும் ஈரான் போர்! கச்சா எண்ணெய் – கேஸ் அபாயம் பற்றி மாநில முதலமைச்சர்களுடன் மோடி தீவிர ஆலோசனை -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி












Click it and Unblock the Notifications