சத்தமில்லாமல் இவ்வளவு சாதனையா.. மோடி அரசின் 'புதிய இந்தியாவை' பாருங்கள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய மோடி அரசு புதிய இந்தியாவை உருவாக்கும் உத்வேகத்தோடு பல திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறது.

மோடி அரசின் இந்த திட்டங்களால் மக்களுக்கு என்ன நல்லது நடந்தது? எப்படியான பலன்களை அரசு பெற்றது என்பது குறித்து புள்ளி விவரங்களோடு பார்த்தால் அதன் வெற்றி, தோல்வி பற்றி அறிந்து கொள்ள முடியும்.

நீங்களும் பாருங்கள், அரசின் திட்டங்கள் வெற்றியா தோல்வியா என்பதை முடிவு செய்துகொள்ளலாம்.

எளிதான பணி

எளிதான பணி

பணிகளை எளிதாக்குவதற்காக பல்வேறு திட்டங்களை அரசு கொண்டு வந்துள்ளது. ஆதார் மூலமாக 657 கோடி eKYC மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கெஜட்டில் இல்லாத அரசு பணிகளுக்கு நேர்காணல் கிடையாது

சுய சான்றிதழ்.
இ-காமர்ஸ்: ஆன்லைன் வணிகத்தின் மதிப்பு 2013ல் 17,000 கோடியாக இருந்தது. 2017ல் அது 2.61 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 2013ல் ஆன்லைன் வர்த்தக வாடிக்கையாளர்களாக 20 மில்லியன் மக்கள் இருந்தனர். இப்போது 140 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதனால் குறிப்பிடத்தக்க அளவுக்கு தள்ளுபடி விலையில் பொருட்கள் கிடைக்கின்றன. நேரமும், பணமும் மிச்சமாகிறது.

ரயில் நிலையங்களில் வைஃபை: 407 ரயில் நிலையங்களில், கட்டுப்பாடற்ற, இலவச வைஃபை இணையதள வசதி. மாதத்திற்கு, 8 மில்லியன் பயனாளர்கள் பயன்படுத்துகிறார்கள். இதில் 35 சதவீதம் பேர் முதல் முறையாக பயன்படுத்தபவர்கள்.

டிஜிட்டல் பணம் செலுத்துதல்

டிஜிட்டல் பணம் செலுத்துதல்


2014ம் ஆண்டு மே மாதம் ரூ.77 லட்சம் கோடியாக இருந்த டிஜிட்டல் பேமென்ட் என்பது 2018 மார்ச் மாதத்தில் ரூ.216 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. பீம் கேஷ்பேக் மற்றும் தள்ளுபடி ரயில் டிக்கெட்டுகளிலும், பெட்ரோல் பம்ப்புகளிலும் வழங்கப்படுகிறது.

பீம்: 2014ல் பாஸ்போர்ட் சேவை மையங்கள் 77 என்ற அளவில் இருந்தது. மே 2014ல் பாஸ்போர்ட் கால அளவு போலீஸ் பரிசோதனையோடு சேர்த்து 42 நாட்கள் என்ற அளவில் இருந்தது. இப்போது போலீஸ் சோதனை இன்றி, 6 நாட்களில் கிடைக்கிறது.

ஜீவன் பிரமான் ஜீவன் பிரமான்: பென்ஷன்தாரர்களுக்கு ஆதாருடன் இணைக்கப்பட்ட டிஜிட்டல் ஃலைப் சான்று, நேரடியாக செல்ல அவசியம் இல்லை, 1.7 கோடி ஓய்வூதியதாரர்களுக்கு பலன்.

வருமான வரி

வருமான வரி

97 சதவீத வருமான வரி சமர்ப்பிப்பு எலக்ட்ரானிக் முறையில் நடக்கிறது, 94% வருமான வரி சமர்ப்பிப்பு நடைமுறை 60 நாட்களுக்குள் முடிவடைகிறது, 60 நாட்களுக்கஉள் 92 சதவீதம் பேருக்கு கூடுதல் பணம் திரும்ப கிடைத்துவிடுகிறது. பஹல்: பயனாளர்கள் 20.97 கோடி. பண மதிப்பு ரூ.74,453 கோடி.
யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர்: இபிஎப்ஓ மற்றும் பிஎஃப் யுனிவர்சலுக்காக, ரூ.12.2 கோடி யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

பொது சேவை மையங்கள்

பொது சேவை மையங்கள்

பொது சேவை மையங்கள் 300 டிஜிட்டல் சேவைகளை வழங்குகிறது, 2014ல் 83,000 மையங்கள் இருந்த நிலையில், இப்போது, அவை 2.7 லட்சம் மையங்களாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.

டிஜிலாக்கர்கள்: இதற்கான பயனாளர்கள் 86 லட்சம் பேராக உள்ளனர். 1.13 கோடி ஆவணங்கள் சேமிக்கப்பட்டுள்ளன. 4.7 லட்சம் இ-கையெழுத்திட்ட ஆவணங்கள் உள்ளன.

தேசிய ஸ்காலர்ஷிப் போர்டல்: ஸ்காலர்ஷிப்புகளுக்கான, விண்ணப்பங்கள், அனுமதிகள், நடைமுறைகளுக்கான ஒரே விண்ணப்பம். 52 திட்டங்கள் உள்ளடக்கியது.

ஒரே மொபைல் ஆப்

ஒரே மொபைல் ஆப்

ஒரே மொபைல் ஆப்பில் 33 துறைகளின் 162 வகை சேவைகள் கிடைக்கும். பாஸ்போர்ட் சேவை, பாரத் பில்பே போன்றவை இதில் அடங்கும்.

உயர் கல்வி, மருத்துவ சீட்டுகள்: 13 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள், 7 ஐஐடிகள், 7 ஐஐஎம்கள், 1 என்ஐஐடி திறக்கப்பட்டுள்ளது.

பெண்கள் பணி திறமை: 12 வாரங்களாக இருந்த பேறுகால விடுப்பு என்பது 26 வாரங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. SHe-Box திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு, பணியிடத்தில் பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+