தாய்லாந்து சென்ற புத்தரின் நினைவு சின்னங்கள்.. அரசு விருந்தினராக கவுரவிப்பு! நெகிழ்ந்துபோன மோடி
டெல்லி: இந்தியாவிலிருந்து புத்தரின் நினைவு சின்னங்கள் தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், இது இரு நாடுகளுக்கும் இடையேயான ஆன்மீக பாலமாக இருக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்திருக்கிறார்.
புத்தரின் எலும்பு துண்டுகள் இந்தியாவிலிருந்து அண்டை நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இந்த நினைவு சின்னங்களை இந்திய தொல்லியல் துறை கண்டுபிடித்து பாதுகாத்து வருகிறது. இந்த புனித நினைவுச்சின்னங்களின் தொகுப்பின் பகுதிகள் கடந்த 1976 மற்றும் 2012ம் ஆண்டு இலங்கைக்கும், 1993 மற்றும் 2022ம் ஆண்டு மங்கோலியாவிற்கும், 1994 மற்றும் 2007ம் ஆண்டு சிங்கப்பூருக்கும், 1995ம் ஆண்டு தென் கொரியாவிற்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக தற்போது தாய்லாந்துக்கு இந்த புனித நினைவுச் சின்னம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னர் கடைசியாக கடந்த 1995ம் ஆண்டு தாய்லாந்திற்கும் இது அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. தற்போது 29 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த பிப்ரவரி மாதம் இந்த சின்னம் மீண்டும் தாய்லாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
பிப்ரவரி 22ம் தேதி 22 பேர் கொண்ட தூது குழுவுடன் இந்திய விமானப்படை விமானத்தில் இந்த புனித சின்னங்கள் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. இது தாய்லாந்தில் பாங்காக்கின் சனம் லுவாங் பெவிலியனில் 11 நாட்களுக்கு காட்சிப்படுத்தப்படும். அதன் பிறகு, சியாங் மாய், உபோன் ராட்சதானி மற்றும் இறுதியாக கிராபியில் காட்சிக்கு வைக்கப்படும். தாய்லாந்தில் புத்த மதத்தை பின்பற்றுபவர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்பதால், இந்த புனித சின்னத்திற்கு அந்நாட்டு மக்கள் சிறப்பான வரவேற்பளித்துள்ளனர்.
புத்தரின் நினைவு சின்னங்கள் மட்டுமின்றி, புத்தரின் சீடர்களான அரஹத சாரிபுத்தா மற்றும் அரஹத மௌத்கலயனா ஆகியோரின் நினைவுச்சின்னங்களும் தாய்லாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த நினைவு சின்னங்களுக்கு தாய்லாந்து நாட்டு அரசு, 'அரசு விருந்தினர்' மரியாதையை கொடுத்திருக்கிறது.
Sacred Blessings Unveiled!
— Ministry of Culture (@MinOfCultureGoI) March 5, 2024
Thousands gather at Ho Kum Luang in Chiang Mai to honor the Holy Relics of Lord Buddha and his esteemed disciples, Arahant Sariputta and Arahant Moggallana during their enshrinement ceremony . #AmritMahotsav #CultureUnitesAll
(1/2) pic.twitter.com/gmzkSoZv4Y
இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்தும் நோக்கில், நினைவு சின்னங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய தொல்லியல்துறை தெரிவித்திருக்கிறது. தாய்லாந்தில், கடந்த 23ம் தேதி முதல் 3ம் தேதி வரை சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான பௌத்தர்கள் இந்த நினைவு சின்னங்களுக்கு மரியாதை செலுத்தியுள்ளனர்.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், “புத்தரின் இலட்சியங்கள் இந்தியாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையே ஆன்மீகப் பாலமாக விளங்குகின்றன. இரு நாடுகளுக்கும் இடையேயான தொடர்பை இது வளர்க்கிறது. பக்தர்களுக்கு ஆன்மீக ரீதியில் வளமான அனுபவம் கிடைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறியுள்ளார்.
-
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
பவரை காட்டிய இந்தியா! ஹார்முஸ் நீரிணையை கடந்து வரும் மேலும் 2 எண்ணெய் கப்பல்கள்! -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications