டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜப்பான் இந்தியா இடையே 5ஜி தொழில்நுட்பம்.. அடுத்த மாதம் ஜப்பானில் குவாட் நாடுகள் சந்திப்பு!!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவுடன் இணைந்து 5G மற்றும் 5G plus தொழில்நுட்பங்களில் ஈடுபட ஜப்பான் முடிவு செய்துள்ளது. இதன்படி குவாட் கூட்டு நாடுகளில் (QUAD) இடம் பெற்று இருக்கும் நாடுகளான அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்திய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அடுத்த மாதம் ஜப்பானில் கூடுகின்றனர்.

ஜப்பானின் இந்த முடிவை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது. மேலும், இந்தியா 3GPP அம்பிரல்லா மொபைல் தொழில்நுட்ப தரத்தை உயர்த்தவும், இந்திய கிராமங்களில் நெட்வொர்க் தொழில்நுட்பத்தை உயர்த்தவும் முடிவு செய்துள்ளது. சீன தொழில்நுட்ப நிறுவனங்கள்தான் அதிகளவில் 3GPP தொழில்நுட்ப தரத்தைக் கொண்டுள்ளன,

Modi spoke to Japan PM Yoshihide Suga on India and Japan tie-up for 5G technologies

ஜப்பான் புதிய பிரதமர் யோஷிஹிடே சுகாவுடன் இன்று இந்தியப் பிரதமர் மோடி பேசினார். அப்போது இருநாடுகள் ஒத்துழைப்பு மற்றும் உலகளவில் இரண்டு நாடுகளின் கூட்டளிப்பு குறித்து உரையாடினர். 5G மற்றும் 5G plus தொழில்நுட்பம் குறித்து இந்தியப் பிரதமரிடம் சுமா பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தோ-பசிபிக் பகுதியில் சுதந்திரமான பொருளாதாரத்திற்கு வழிவகுக்கும் வகையில் மூன்று நாடுகளின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்று சுகா கூடுதலாக தெரிவித்துள்ளார். இந்த கூட்டு தொழில்நுட்பத்தில் ஆஸ்திரேலியா, அமெரிக்காவும் இணைந்து கொள்ள உள்ளன.

இந்தியாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, ஜப்பானிய தற்காப்புப் படைகள் மற்றும் இந்திய ஆயுதப்படைகள் தங்களுக்குள் பொருட்கள் மற்றும் போக்குவரத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இதன்படி, வரும் நவம்பர் மாதம் இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா இணைந்து கடற்படை பயிற்சியில் ஈடுபட இருக்கிறது.

யாராச்சும் யாராச்சும் "குறை" சொன்னா.. குடத்தை எடுத்து முகத்துலயே குத்துங்க.. சீனிவாசன் வாயை திறந்தாலே வைரலாகுதே

இதற்கிடையே சென்காகு தீவில் சீனா அத்துமீறலில் ஈடுபட்டு வருவதால், ஜப்பான் பாதுகாப்புத்துறைக்கு என்று அதிக நிதியை ஒதுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தியாவும் எல்லையில் சீனாவின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது.

English summary
Modi spoke to Japan PM Yoshihide Suga on India and Japan tie-up for 5G technologies
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X