ஹலோ ரிஷியா? “டிமிக்கி” காட்டும் மல்லையா, நிரவ் மோடி.. பிரிட்டன் பிரமதருக்கு பறந்த மோடியின் போன் கால்
டெல்லி: பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிடம் தொலைபேசியில் உரையாடிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுவிட்டு பிரிட்டனில் தஞ்சம் புகுந்து இருக்கும் பொருளாதார குற்றவாளிகளை இந்திய நீதித்துறை முன் நிறுத்து குறித்தும், இந்திய தூதரங்களின் பாதுகாப்பு தொடர்பாகவும் உரையாடினார்.
இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றான பிரிட்டனின் பிரதமராக பதவியேற்றார். இந்த நிலையில் அவருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக உரையாடினார். இதில் இரு நாடுகள் இடையேயான வர்த்தகம், பொருளாதாரம் குறித்து பேசினர்.

குறிப்பாக பிரிட்டனில் செயல்பட்டு வரும் இந்திய தூதரங்களின் பாதுகாப்பின்மை குறித்து பிரிட்டன் பிரதமரிடம் பிரதமர் மோடி தெரிவித்தார். இந்தியாவுக்கு எதிராக பிரிட்டனில் செயல்பட்டு வரும் நடவடிக்கைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ரிஷி சுனக்கில் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டு உள்ளார்.
காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது பறந்துகொண்டு இருக்கும் தேசிய கொடியை இழுந்த விவகாரம் பூதாகரமாக வெடித்து இருக்கும் நிலையில் அதுகுறித்து பிரதமர் மோடி ரிஷி சுனக்கிடம் பேசியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை எந்த வகையிலும் தன்னால் ஏற்க முடியாது என ரிஷி சுனக் பிரதமர் மோடியிடம் தொலைபேசி உரையாடலின்போது தெரிவித்து இருக்கிறார்.
பிரிட்டனில் அமைந்து இருக்கும் இந்திய தூதரங்கள் மற்றும் அதன் பணியாளர்களுக்கான பாதுகாப்பை தான் உறுதி செய்வதாக ரிஷி சுனக் உறுதியளித்து உள்ளார். அதேபோன்று, இந்தியாவில் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுவிட்டு பிரிட்டனில் தஞ்சம் புகுந்து உள்ளவர்களை இந்திய நீதித்துறை விசாரணைக்கு ஆஜர்படுத்துவதற்காக அவர்களை நாடு திருப்ப வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டு உள்ளார்.
வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற இருக்கும் ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ரிஷி சுனக்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்து உள்ளார். இந்த ஆண்டு இந்தியா தலைமையில் ஜி20 மாநாடு நடைபெற உள்ள நிலையில், இந்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ரிஷி சுனக் பாராட்டு தெரிவித்தார்.

இந்திய அரசு எடுக்கும் முயற்சிகளுக்காகவும், ஜி20 மாநாடு வெற்றிபெறுவதற்காகவும் முழு ஆதரவை பிரிட்டன் வழங்கும் என நம்பிக்கை அளித்தார் ரிஷி. இந்தியா வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுவிட்டு திரும்பி செலுத்தாமல் தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் தஞ்சம் புகுந்து வாழ்ந்து வருகிறார். அதேபோல் நிரவ் மோடியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல்லாயிரம் கோடி கடன் பெற்றுவிட்டு லண்டனுக்கே தஞ்சம் புகுந்து இருக்கிறார்.
இவர்களுக்கு எதிராக இந்தியாவில் நீதித்துறை விசாரணை நடத்தப்பட்டு வரும் சூழலில் அவர்களை லண்டனில் இருந்து நாடு திரும்ப முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி பிரிட்டர் பிரதமரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்து உள்ளார். அதை தொடர்ந்து பைசாகி பண்டிகையை முன்னிட்டு இங்கிலாந்தில் உள்ள இந்திய மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications