டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

யாருயா நீங்கல்லாம்? ஸ்விக்கியில் “அம்மாவை” அதிகம் தேடிய மக்கள்.. உள்ளாடை,பெட்ரோலும் லிஸ்டில் இருக்கு

Google Oneindia Tamil News

டெல்லி: பிரபல உணவு டெலிவரி செயலியான ஸ்விக்கி தனது செயலியில் தேடப்பட்ட வித்தியாசமான விசயங்களை பட்டியலிட்டு இருக்கிறது. அதை பார்த்தபோது ஒரு பக்கம் அதிர்ச்சியும், மறுபக்கம் சிரிப்பும் சேர்ந்தே வரும்.

அப்படி என்னதான் செய்து வைத்திருக்கிறார்கள் என்ற கேள்வி உங்களுக்கு எழுகிறதா? விரிவாக இப்பதிவில் பார்ப்போம். பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கியின் மூலம் இந்தியாவில் கோடிக்கணக்கான உணவு டெலிவரி செய்யப்பட்டு வருகிறது.

இப்படி நாடு முழுவதும் பெரு நகரங்களில் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் ஸ்விக்கி இன்ஸ்டா மார்ட் என்ற சேவையையும் தொடங்கி நடத்தி வருகிறது.

16 மணி நேரம் வேலை.. குறைந்த சம்பளம்.. சென்னையில் போராட்டத்தில் குதித்த ஸ்விக்கி ஊழியர்கள்! 16 மணி நேரம் வேலை.. குறைந்த சம்பளம்.. சென்னையில் போராட்டத்தில் குதித்த ஸ்விக்கி ஊழியர்கள்!

அதிகம் தேடப்பட்ட பொருட்கள்

அதிகம் தேடப்பட்ட பொருட்கள்

இந்த இன்ஸ்டா மார்ட் மூலமாக மளிகை பொருட்களையும் வீட்டிலிருந்து ஆர்டர் செய்து டோர் டெலிவரி மூலம் பெற்றுக்கொள்ள முடியும். இந்த நிலையில்தான், ஸ்விக்கி நிறுவனம், 2022 ஆம் ஆண்டு தங்கள் செயலியில் அதிகளவில் இந்திய மக்களால் தேடப்பட்ட உணவு பண்டங்களின் பெயர்களை வெளியிட்டு இருக்கிறது.

7 ஆண்டாக முதலிடத்தில் பிரியாணி

7 ஆண்டாக முதலிடத்தில் பிரியாணி

அதில் இந்த ஆண்டும் பிரியாணியே முதலிடத்தில் இருந்தது. கடந்த 7 ஆண்டுகளாக பிரியாணி முதலிடத்தில் இருப்பதாக ஸ்விக்கி தெரிவித்து உள்ளது. இந்த நிலையில், ஸ்விக்கியின் இன்ஸ்டா மார்டில் 2022 ஆம் ஆண்டு தேடப்பட்ட வித்தியாசமான விசயங்களை அந்த நிறுவனம் தற்போது பட்டியல்போட்டு ட்விட்டரில் வெளியிட்டு இருக்கிறது.

உள்ளாடை தேடிய மக்கள்

உள்ளாடை தேடிய மக்கள்

அதில் முதலிடத்தில் இருப்பது மெத்தை. Bed என்று ஆங்கிலத்தில் 23,432 பேர் தேடி இருப்பதாக ஸ்விக்கி கூறுகிறது. "உள்ளாடை". இதற்கு அடுத்த இடத்தில் இருப்பது சோஃபா. 20,653 பேர் ஸ்விக்கியில் Sofa என்று ஆங்கிலத்தில் தேடி உள்ளார்கள். "Underwear" என்று மட்டும் 8,810 பேர் சுவிக்கி இன்ஸ்டாமார்ட்டில் தேடி இருக்கிறார்களாம்.

அம்மா வேண்டுமாம்

அம்மா வேண்டுமாம்

அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது "அம்மா". 7,275 பேர் "Mommy" என்று தேடி இருப்பதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்து உள்ளது. அதேபோல் பெட்ரோல் என்று 5,981 பேர் ஸ்விக்கியில் தேடி இருக்கிறார்கள். ஸ்விக்கி என்பது உணவு டெலிவரி செய்யும் தளமாக உள்ளது. இன்ஸ்டா மார்ட் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் தளம்.

 சோபா, பெட்

சோபா, பெட்

இதில் மக்கள் இந்த 5 விசயங்களும் கிடைக்கும் என்ற அறியாமையில் வாடிக்கையாளர்கள் தேடினார்களா அல்லது டைம் பாஸ் செய்வதற்காக இவ்வாறு செய்தார்களா? என்று தெரியவில்லை. உள்ளாடை, சோபா, பெட் ஆகியவை கூட ஆன்லைனில் ஆர்டர் செய்து டோர் டெலிவரியாக பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

பெட்ரோல் எப்படி கிடைக்கும்?

பெட்ரோல் எப்படி கிடைக்கும்?

ஆனால், பெட்ரோல் என்பது பங்குகளில் மட்டுமே கிடைக்கும் என்பதை அறியாதவர்கள் யாருமில்லை. கிராமபுறங்களில் சில கடைகளில் மட்டும் பெட்ரோலை சேமித்து விற்பனை செய்வார்கள். ஆனால், கிராமங்களில் ஸ்விக்கி பயன்பாடும், சேவையும் இல்லாததால் நகரவாசிகளே இதை அதிகம் தேடி இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஸ்விக்கியே வியந்த வார்த்தை

ஸ்விக்கியே வியந்த வார்த்தை

இதைவிட வித்தியாசமான தகவல் என்னவென்றால் அம்மாவை தேடியதுதான். எதற்காக ஸ்விக்கியில் Mommy என்று தேடினார்கள் என்பதை யூகிக்கக் கூட முடியவில்லை. ஆனால், சுமார் 6000 பேர் அவ்வாறு தேடி இருப்பதுதான் வேடிக்கை. அதனால்தான் ஸ்விக்கியே வியப்படைந்து இதை தனி பதிவாகவே வெளியிட்டு இருக்கிறது.

English summary
Popular food delivery app Swiggy lists different things searched on its app. When you see it, you will be shocked on one side and laugh on the other side.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X