"மசூதி".. முஸ்லிம்களுக்கு செக்.. கெடு வைத்த ராஜ்தாக்கரேவை கைது செய்யுங்க.. கொந்தளிக்கும் கட்சிகள்
மசூதிகளில் ஒலிபெருக்கி சத்தம் குறித்து தேசியவாத காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது
டெல்லி: மசூதிகளில் ஒலி பெருக்கிகளை அகற்ற வேண்டும் என்று கெடு வைத்த ராஜ்தாக்கரேவை கைது செய்ய வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
ஹிஜாப் விவகாரம், ஹலால் இறைச்சி விவகாரத்தை தொடர்ந்து, மசூதிகளில் பாங்கு ஒலிக்கும் ஒலிபெருக்கி விவகாரமும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.. குறிப்பாக கர்நாடகா உட்பட, வடமாநிலங்களில் இந்த ஒலிபெருக்கி விவகாரம் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.
கர்நாடகாவை பொறுத்தவரை, மசூதிகள், கோவில்கள், பிற பகுதிகளில் ஒலி பெருக்கிகள் பயன்பாடு குறித்து கர்நாடக ஹைகோர்ட்டு ஏற்கனவே ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது.

மசூதிகள்
அதாவது எந்தெந்த இடங்களில் எவ்வளவு ஒலியை பயன்படுத்த வேண்டும், ஒலியை அளவிடும் டெசிபல் மீட்டரை பொருத்த வேண்டும் என்று கோர்ட்டு தெரிவித்திருந்தது.. இதையடுத்து, ஒலிபெருக்கிகளை அனுமதிக்கப்பட்ட டெசிபல் அளவிற்குள் பயன்படுத்துமாறு மசூதிகள், கோயில்கள், தேவாலயங்கள் உட்பட 301 நிறுவனங்களுக்கு, பெங்களூரு போலீஸ் தரப்பிலிருந்தும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனாலும், பாகுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நாட்டின் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

அறிவிப்புகள்
எனினும், இது தொடர்பான சர்ச்சை மகாராஷ்டிராவில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.. கடந்த 2-ம்தேதி நடந்த குடிபட்வா பொது கூட்டத்தில் நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே பேசும்போது, யாரும் கலவரத்தை விரும்பவில்லை.. அவர்களின் பிரார்த்தனைகளையும் எதிர்க்கவில்லை.. ஆனால் சட்டத்தைவிட மதம் பெரிதல்ல என்பதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்..

மசூதிகள்
மசூதிகளில் அதிக சத்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும், இதேபோல மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளை அகற்றவில்லையெனில், அதன் அருகே நாங்களும், அவங்களை போலவே ஸ்பீக்கரில் அனுமன் பாடல்களை ஒலிப்பார்கள், மே-3 வரட்டும், 3-ம் தேதிக்கு பிறகு என்ன செய்வது என்று சொல்கிறேன் என்றும் அதிரடியாக பேசியிருந்தார்.

மசூதிகளில் ஸ்பீக்கர்கள்
ராஜ்தாக்கரேயின் இந்த பேச்சு மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி வருகிறது.. இந்நிலையில்தான், ராஜ் தாக்கரேவை கைது செய்ய வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.. இதைபற்றி மூத்த தலைவர்களில் ஒருவரான ஆசிப் ஷேக் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "ராஜ் தாக்கரே மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.. மசூதிகளில் ஸ்பீக்கர்களை உடனடியாக எடுக்க வேண்டும் என்று கெடு வைத்து பேசியதற்காக அவர் கைது செய்யப்பட வேண்டும்...

ஸ்பீக்கர்கள்
இதுகுறித்து மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் திலிப் வால்ஸ்க்கும் கடிதம் எழுதியிருக்கிறேன்.. சட்டம் எல்லாருக்கும் பொதுவானதுதான்.. அந்த சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்" என்றார். முன்னதாக, மாநில காங்கிரஸின் சீனியரான நானா படோலா கூறும்போது, சமூக பிரச்சினையை ஏற்படுத்தும் தலைவர்களின் பொதுக்கூட்டங்களுக்கு மாநில அரசு அனுமதி வழங்க கூடாது என்று கோரிக்கை விடுத்திருந்தது நினைவிருக்கலாம்..

ஸ்பீக்கர்களுக்கு அனுமதியா?
இப்படியான தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ தரப்பினரின் கோரிக்கைகளை மகாராஷ்டிர அரசும் ஏற்றுக் கொண்டுள்ளப்படும் என்றே நம்பப்படுகிறது.. இதனிடையே, மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் திலீப் வால்ஸ், செய்தியாளர்களிடம் பேசும்போது, மத தலங்களில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவது உரிய அனுமதியுடன் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.. இதையடுத்து அம்மாநில தலைவர்களின் நிலைப்பாடுகள் எப்படி இருக்க போகின்றன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications