வெளிநாட்டில் மருத்துவம் படிக்கிறாங்க, ஆனா நீட் தேர்வில் பெயில் ஆகுறாங்க.. பிரகலாத் ஜோஷி கிண்டல்
டெல்லி: வெளிநாட்டில் மருத்துவம் படிக்கும் இந்திய மாணவர்களில் 90 சதவீதம் பேர் இந்தியாவில் நடத்தப்படும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற தவறி விடுகிறார்கள் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா கடுமாயக போர் தாக்குதல் நடந்தி வருகிறது. ரஷ்யாவின் தாக்குதல் தினம் தினம் அதிகரித்து வருகிறது. இருநாட்டு தரப்பிலும் அதிகளவில் தேசங்கள் ஏற்பட்டுள்ளன.
உக்ரைனில் போர் நடந்து வருவதால், அங்கு மருத்துவம் படிக்க சென்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் சிக்கித் தவித்தார்கள். அவர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது.

இந்திய மாணவர்கள்
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்த நிலையில், அங்குள்ள இந்தியர்களை வெளியேற்றும் பணியில் இந்திய அரசு இறங்கியது. கணக்கெடுப்பில் உக்ரைனில் சுமார் 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் படித்து வருவது தெரிய வந்தது. அதில் பெரும்பாலானோர் மருத்துவம் படித்து வருகிறார்கள். நீட் தேர்வு, மருத்துவ படிப்புக்கான செலவு இதெல்லாம் உக்ரைனில் குறைவு என்பதால் அதிக மாணவர்கள் உக்ரைனைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

இந்தியா
இந்தியாவில் மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் 7 லட்சம் முதல் 8 லட்சம் மாணவர்கள் வரை தேர்ச்சி பெறுகிறார்கள். ஆனால், 90 ஆயிரம் மருத்துவ இடங்கள் மட்டுமே இந்தியாவில் இருக்கின்றன. நிர்வாக ஒதுக்கீட்டில் 20 ஆயிரம் இடங்களே கிடைக்கின்றன. தனியார் மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவம் படித்துமுடிக்க, சுமார் 30 லட்சம் ரூபாய் முதல் 70 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது.
மருத்துவக் கனவை விட முடியாத மாணவர்கள் இங்கிருந்து வெளிநாடு சென்று படிக்கிறார்கள்.

உக்ரைன் கல்லூரிகள்
உக்ரைனில் மருத்துவம் படிப்பவர்களில் இந்திய மாணவர்கள் 25 சதவிகிதம் பேர். உக்ரைனில் 40-க்கும் அதிகமான மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. ஆனால் அங்குள்ள 7 கல்லூரிகளில் இந்தியர்கள் அதிகம் படிக்கின்றனர். உக்ரைன் மட்டுமின்றி, சீனா, ரஷ்யா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் சென்று இந்திய மாணவர்கள் மருத்துவம் படிக்கிறார்கள். இங்கெல்லாம் இந்தியாவைவிட மருத்துவம் படிக்க குறைந்த அளவிலேயே செலவாகிறது.

தகுதி
என்னதான் வெளிநாட்டில் படித்திருந்தாலும், இந்தியாவில் மருத்துவராக பணியாற்ற வேண்டுமென்றால், இந்திய மருத்துவ கழகம் நடத்தும் தேர்வில் வெற்றி பெற வேண்டும். அப்படித்தான் வெளிநாட்டில் படித்த பலரும் தற்போது வரை தேர்வு எழுதி வருகிறார்கள். இந்தியா மிகப்பெரிய மருத்துவ மையம் என்பதால், பல வெளிநாட்டு மருத்துவ கல்லூரிகளில் இந்தியாவில் இருக்கும் பாடங்களையே அதிகம் வைத்திருக்கிறார்கள். இதனால் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்.

அமைச்சர்
இந்த தகுதி தேர்வு குறித்து மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் ''வெளிநாட்டில் மருத்துவம் படிக்கும் இந்திய மாணவர்களில் 90 சதவீதம் பேர் இந்தியாவில் நடத்தப்படும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற தவறி விடுகிறார்கள். இந்த நேரத்தில் மாணவர்கள் மருத்துவம் படிக்க ஏன் வெளிநாடு செல்கிறார்கள் என்பது குறித்து விவாதம் நடத்த இது சரியான நேரம் அல்ல'' என்றார்.












Click it and Unblock the Notifications