டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீராய்வு மனு தள்ளுபடியானது மகிழ்ச்சி.. இது மட்டுமே எங்களை திருப்திப்படுத்தாது.. நிர்பயா பெற்றோர்

Google Oneindia Tamil News

டெல்லி: தூக்கு தண்டனை கைதி அக்ஷய்குமாரின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என நிர்பயாவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை பெற்றவர்களின் கருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்தார். இதையடுத்து அக்ஷய்குமாரின் தூக்கு தண்டனை குறித்து சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

Mother of 2012 rape victim, says about review petition rejection that iam very happy

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஆர் பானுமதி தலைமையிலான நீதிபதிகள் அசோக் பூஷன், ஏஎஸ் போபண்ணா ஆகியோர் அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. அப்போது அக்ஷய்குமார் சிங் தரப்பில் ஏ பி சிங் ஆஜரானார்.

இவர் அக்ஷய் குமாருக்கும் நிர்பயா வழக்கிற்கும் எந்ததொடர்பும் இல்லை என்றும் அவரது குடும்ப சூழல் குறித்தும் நீதிபதிகளிடம் வாதாடினார். ஆனால் இவரது சீராய்வு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

இதுகுறித்து நிர்பயாவின் தாய் ஆஷா தேவியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அவர் தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். அது போல் நிர்பயாவின் தந்தை பத்ரிநாத் சிங் கூறுகையில் அக்ஷய்குமாரின் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இதனால் நாங்கள் திருப்தி அடையவில்லை. அவர்கள் 4 பேருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான உத்தரவை பாட்டியாலா நீதிமன்றம் கொடுக்கும் வரை நாங்கள் திருப்தி அடைய மாட்டோம் என்றார்.

English summary
Asha Devi, mother of 2012 Delhi gang-rape victim, on SC rejects review petition of convict Akshay says that she is very happy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X